பாமக எனும் கட்சி தனி மனித உழைப்பினால் 96 ஆராயிரம் கிராமங்களுக்கு சென்று காடுமேடு அலைந்து திரிந்து வியர்வை சிந்தி உருவாக்கினேன் என அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
2026 தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிளவுபட்டுக் கிடக்கும் பாமகவை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க, அதிமுகவும் பாஜகவும் தனித் தனியாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.