ரூ. 1,19,481 விலையில் அறிமுகமானது புதிய ‘2025 ஹோண்டா யுனிகார்ன்’
இந்திய சந்தையில் உள்ள தனது மாடல்களை மேம்படுத்தும் விதமாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பிராண்ட் சமீபத்தில் Activa 125 மற்றும் SP125-ல் புதிய அப்டேட்டுகளை கொடுத்து ரீ லான்ச் செய்த நிலையில், தற்போது 2025 ஆண்டிற்கான புதிய ஹோண்டா யூனிகார்ன் பைக்கை ரூ. 1,19,481 எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் கூடுதல் அம்சங்களுடன், அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவிருக்கும் OBD-2B விதிமுறைகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
என்ஜின்:
ஹோண்டா யூனிகார்ன் என்ஜினில் மிக முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 1 ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் புதிய OBD2B விதிமுறைகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. 162.71cc ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 13.18PS மற்றும் 14.58Nm ஐ வெளிப்படுத்துகிறது. மேலும் என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அம்சங்கள்:
LED ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் instrument cluster என புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் '2025 ஹோண்டா யூனிகார்ன்' அறிமுகமாகியுள்ளது. கூடுதலாக, மொபைலை சார்ஜ் செய்ய USB Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு:
பக்காவான தோற்றம் கொண்ட இந்த வண்டியில், எந்த ஒரு வடிவமைப்பு மாற்றமும் ஏற்படுத்தவில்லை. எனினும் இந்த பைக் பியர்ல் இக்னியஸ் பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் என 3 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்:
‘2025 ஹோண்டா யூனிகார்ன்’ 8,180 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு, 1,19,481 ரூபாய்க்கு எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது TVS Apache RTR 160, பஜாஜ் பல்சர் 150, Yamaha FZ & FZ-S FI V3 மற்றும் Hero Xtreme 160R போன்ற வண்டிகளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.
‘2025 ஹோண்டா யூனிகார்ன்’ அதன் நம்பகத்தன்மையான செயல்திறன், குறைந்த பராமரிப்பு செலவுகள் மூலம் பயனர்களின் விருப்பமான பைக்காக மிளிர்கிறது. அதுமட்டுமின்றி யூனிகார்னின் சௌகரியம், எரிபொருள் திறன் மற்றும் அதன் வடிவமைப்பு ஆகியவை தினசரி நகரப் பயணங்களுக்கு ஏற்றவாறும், எப்போதாவது நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு ஏற்றவாறும், பட்ஜெட் Friendlyஆக அமைந்துள்ளது.