Harley-Davidson பைக் இந்தியாவில் அறிமுகம்! குறைந்தபட்ச விலை எவ்வளவு தெரியுமா? #video

இந்தியாவில் ஹார்லி டேவிட்சனின் X440 ரக இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரபல பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே Harley-Davidson X440 என்ற இருசக்கர வாகனத்தை தயாரித்துள்ளது. பைக் விற்பனை சந்தையில் பெரிய போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த இருசக்கர வாகனத்திற்கு, குறைந்தபட்ச விலையாக 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில், விற்பனை விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பைக் விற்பனை சந்தையில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் அறிமுகம் என்பது, ராயல் என்ஃபீல்ட் பைக்குகளுக்கு சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com