2024ம் ஆண்டில் அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையைப் படைத்தது Tata Punch
2024ம் ஆண்டில், டாடா பன்ச் காரின் விற்பனை 2 லட்சத்தைத் தாண்டிய நிலையில், மாருதி சுசுகி வேகன் ஆர் 1.9 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 40 ஆண்டுகளில் முதல் முறையாக, டாடா மோட்டார்ஸின் Sub-Compact எஸ்யூவியான பஞ்ச், மாருதி சுஸுகியின் வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களை பின்னுக்குத் தள்ளி 2024ம் ஆண்டில், நாட்டின் சிறந்த விற்பனை காராக மாறியுள்ளது.
2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்ச், அதன் SUV Silhouette, Upright Stance, 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவற்றுடன், sub-4m SUV பிரிவில் புதிய செக்மென்ட்டாக உருவானது. மாருதி ஸ்விஃப்ட் போன்ற ஹேட்ச்பேக்குகளை வாங்குபவர்களுக்கு இந்த செக்மெண்ட் சிறந்த மாற்றாக அமைந்தது. ஆகையால், டாடா பஞ்ச் ஒரு மாதத்திற்கு 10,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது மற்றும் 2022 இல் அதிகம் விற்பனையாகும் கார்களில் 10வது சிறந்த விற்பனை காராக புகழ்பெற்றது.
பிரீமியம் கார்களை நோக்கி பயணிக்கும் இந்தியாவின் மாற்றம், நாட்டின் மிகப்பெரிய மலிவு விலை கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு பெரும் சோதனையாக அமைந்தது. குறிப்பாக, ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான மாருதி சுஸுகியின் சந்தைப் பங்கை பாதித்தது.
2018 ஆம் ஆண்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முன்பாக, சுமார் 33.49 லட்சம் கார் விற்பனைகளால், இந்தியத் தொழில்துறையில் சிறந்து இருந்தது. இந்திய சந்தையின் 52 சதவீத பங்கைக் கொண்டு, மாருதி அதன் அனைத்து போட்டியாளர்களையும் விட அதிக கார்களை விற்பனை செய்தது. 2024 ஆம் ஆண்டில், தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியத் தொழில்துறை 42.86 லட்சம் கார் விற்பனையால் மற்றொரு உச்சத்தை எட்டியபோது, மாருதியின் சந்தைப் பங்கு 41 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் சிறந்த விற்பனையான காரை வழங்குவதற்கான தனித்துவத்தையும் இழந்தது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், அம்பாசிடர் கார் மூன்று தசாப்தங்களாக முதலிடத்தில் இருந்தது, அதன் பின் பிரீமியர் பத்மினியுடன், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது தயாரிப்பாளராக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் உருவெடுத்தது. ஆனால், 1985ம் ஆண்டில், Suzuki மலிவு விலையில் அறிமுகப்படுத்திய ‘மாருதி 800’ அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெயரைப் பெற்றது. அடுத்த நான்கு தசாப்தங்களுக்கு மாருதி-சுசுகி ஆதிக்கம் செலுத்தியது.
‘மாருதி 800’க்குப் பிறகு, 2011-ல் ‘ஆல்டோ’ 3,11,367 யூனிட்களை விற்பனை செய்து தொடர்ச்சியாக 13 ஆண்டுகளுக்கு சிறந்த விற்பனை காராக அமைந்தது. இது இந்தியத் தொழில்துறையில் இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனையாகும். ஆனால், 2018க்குப் பிறகு, BS IVலிருந்து BS VIக்கு மாறிய பொழுது கட்டாய ஏர்பேக்குகள் போன்ற புதிய விதிமுறைகளின் காரணமாக ஆல்டோ விறபனையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இருப்பினும், தயாரிப்புகளில் sub-4m Dzire-க்கு பிறகு Swift Premium Hatchback, அதன் பிறகு Tall Boy Wagon R என முதல் இடத்தில் மாருதி நிலைத்து நின்றது.
தற்போது, 2024ம் ஆண்டின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு மாருதியை பின்னுக்குத் தள்ளி, ஆண்டின் சிறந்த விற்பனை காராக டாடா பஞ்ச் உருவெடுத்துள்ளது. குறைவான விலை மற்றும் ஈர்க்கக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக, கடந்த ஆண்டு 2,02,030 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் 87.8 PS மற்றும் 115 Nm டார்க்கை வழங்கும் 1.2L Rev பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மாடல் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் பல டிரான்ஸ்மிஷன் விருப்பங்கள் உட்பட EV வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது.