டாடா குழுமம்
டாடா குழுமம்எக்ஸ் தளம்

ஹூண்டாய் மோட்டார், மாருதி சுசுகியை தொடர்ந்து.. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்து அதிரடி முடிவு!

ஹூண்டாய் மோட்டார், மாருதி சுசுகியை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
Published on

ஹூண்டாய் மோட்டார், மாருதி சுசுகியை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த விலையேற்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் எனக் கூறியுள்ளது. மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்க உயர்வால் கார்களின் விலையை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

டாடா குழுமம்
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெகட்ரான் ஆலையை கையகப்படுத்துகிறதா டாடா நிறுவனம்?

முன்னதாக, அனைத்து மாடல் கார்களின் விலையையும் 25 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்போவதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும், கார்களின் விலையை 4 விழுக்காடு வரை உயர்த்தப்போவதாக மாருதி சுசுகியும் அறிவித்துள்ளது. இதுதவிர, மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா, ஆடி, பி.எம். டபிள்யூ. ஆகிய கார் நிறுவனங்களும் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com