\
pegatron
pegatronpt web

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெகட்ரான் ஆலையை கையகப்படுத்துகிறதா டாடா நிறுவனம்?

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெகட்ரான் ஆலையின் பெரும்பான்மையான பங்குகளை டாடா நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on

தைவானைச் சேர்ந்த பெகட்ரான் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை ஒப்பந்த அடிப்படையில் சென்னையில் உள்ள தனது ஆலை மூலம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆலையின் பெரும்பான்மையான பங்குகளை டாடா நிறுவனத்திற்கு விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒப்புகொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

pegatron
தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்? - நிர்வாகி அளித்த சர்ப்ரைஸ் பதில்!

அதன்படி, 60 சதவிகித பங்குகளுடன் டாடா நிறுவனம் அன்றாட செயல்பாடுகளையும், மீதமுள்ள பங்குகளுடன் பெகட்ரான் தொழில்நுட்ப வசதியையும் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இந்தியாவில் உள்ள பெகட்ரானின் ஒரே ஐபோன் உற்பத்தி ஆலை டாடா வசமாக உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com