Mercedes Benz Showroom
Mercedes Benz ShowroomFIle image

அசத்தலான அம்சங்களுடன் புதிய மாடல் Mercedes Benz கார்கள் அறிமுகம்!

தீபாவளி மற்றும் இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் சொகுசு கார்களின் விற்பனை அதிகரித்து வருவதாக மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவன மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஓணம் தொடங்கி தீபாவளி வரை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், எனவே இந்தியாவிற்கு கூடுதலாக கார்களை தொழிற்சாலையில் இருந்து அனுப்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தரும் வரவேற்பிற்கு ஏற்ப புதிய தொழில் நுட்பங்களுடன் கூடுதல் வசதிகள் கார்களில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் மெர்சிடஸ்பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Mercedes Benz Showroom
மஹிந்திரா கம்பெனி ஓனரே பார்த்து வியந்த கார்..! அப்படி என்ன ஸ்பெஷல் இதில்?

தசரா, தந்தேரஸ், தீபாவளி பண்டிகைகளின் போது சாதனை அளவாக கார் டெலிவரி நடைபெற்றிருப்பதாக அந்நிறுவன மேலாண் இயக்குனர் சந்தோஷ் ஐயர் தெரிவித்தார். மற்றொரு சொகுசு கார் நிறுவனமான ஆடி இந்தியா, இந்த பண்டிகை சீசனில் விற்பனை 88 சதவிகிதம் அதிகரித்து 5,500க்கும் மேற்பட்ட கார்களை டெலிவரி செய்துள்ளது.

ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்த சாதனை நடந்ததாக அந்நிறுவனத்தின் தலைவர் பல்வீர் சிங் தில்லான் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com