புதினா சட்னி, பூண்டு சட்னி கேட்டிருப்பீங்க! எறும்பு சட்னி தெரியுமா? ’GI tag’ கிடைச்சுருக்காம்!

ஒடிசாவில் உள்ள பழங்குடியினத்தவர்கள் சிவப்பு எறும்பைக் கொண்டு சட்னி செய்து சாப்பிடுவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். இந்த உணவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
சிவப்பு எறும்பு
சிவப்பு எறும்புPT

வெங்காய சட்னி, பூண்டு சட்னி, இப்படி சொல்லிதான் கேள்வி பட்டு இருப்போம். எறும்பு சட்னி கேள்வி பட்டு இருக்கிறீர்களா? ...

உணவில் ஒன்றிரண்டு எறும்புகள் இருந்தால் அதைச் சிலர் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். எறும்புதானே... என்று தட்டி விட்டு சாப்பிடுவார்கள். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று ஒடிசாவில் உள்ள பழங்குடியினத்தவர்கள் சிவப்பு எறும்பைக்கொண்டு சட்னி செய்து சாப்பிடுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா?.. அதிலும் கடந்த ஜனவரி 2ம் தேதி இதற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்றால்....? நம்பிதான் ஆகவேண்டும்.

சிவப்பு எறும்பு
”முதலில் இந்த இடங்களை சுற்றிப் பார்க்கணும்” - சாக்‌ஷி உடனான டிராவல் பிளான் குறித்து தோனி!

ஒடிசாவில் குறிப்பாக மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் பழங்குடி இனத்தவர்களின் பிரதான உணவு இந்த சிவப்பு எறும்பு சட்னி.

சிவப்பு எறும்பு சட்னியின் பலன் என்ன?

ஒடிசாவில் சிவப்பு எறும்பு மரங்களில்தான் அதிகம் காணப்படுகிறது என்றும், இத்தகைய எறும்பை சிலர் அப்படியே சாப்பிடவும், சிலர் இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து சட்னியாகவும் சாப்பிடு வருகின்றனர். இத்தகைய சட்னிக்கு சிமிலிபால் காய் சட்னி என்று பெயர். சிவப்பு எறும்பில் நிறைய புரதங்கள் விட்டமின்கள், மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக பழங்குடியினத்தவர்கள் நம்புகிறார்கள்.

பொதுவாக பழங்குடியினத்தவர்கள் தங்களின் உணவில் சிறியவகை பூச்சிகளான எறும்பு, வெட்டுகிளி, பட்டுப்புழு போன்றவற்றை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்ட நிலையில், சிவப்பு எறும்பு சட்னி புவிசார் குறியீட்டை (GI) பெற்றுள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா?.

ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு போன்றவற்றுடன் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும்.

சிவப்பு எறும்பை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுபவர்கள் ஒடிசாவில் மட்டுமின்றி சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநில மக்கள் இதை பெரிதும் விரும்பி சுவைக்கின்றனர். இது சத்தான உணவாக கருதப்பட்டதால் கோவிட் காலங்களில் மக்கள் தங்கள் உணவில் அதிகளவு சிவப்பு எறும்பை உட்க்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

2018ல் பிரிட்டிஷ் சமையல்காரரான கோர்டன் ராம்சே கூட சிவப்பு எறுப்பு சட்னி சுவையானது என்று தனது மெனுவில் சேர்த்ததாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com