”முதலில் இந்த இடங்களை சுற்றிப் பார்க்கணும்” - சாக்‌ஷி உடனான டிராவல் பிளான் குறித்து தோனி!

”எனக்கும் எனது மனைவி சாக்‌ஷிக்கும் டிராவல் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று, நான் விளையாடுவதற்காக வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு செல்லும் பொழுது ஊர்சுற்றி பார்க்க விரும்பமாட்டேன்” தோனி
தோனி, சாக்‌ஷி
தோனி, சாக்‌ஷிகூகுள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தற்போதையை கேப்டனுமான எம்.எஸ்.தோனி. விரைவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனில் களமிறங்க உள்ளார். அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வீடியோ ஒன்றை X வளைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அவர் ”எனக்கும் எனது மனைவி சாக்‌ஷிக்கும் டிராவல் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று. நான் விளையாடுவதற்காக வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு செல்லும் பொழுது ஊர்சுற்றி பார்க்க விரும்பமாட்டேன். காரணம் நான் வந்த நோக்கம் கிரிக்கெட் விளையாடுவதற்குதான் என்பதை உணர்ந்து புதுப்புது இடங்களை சுற்றிபார்ப்பதை தவிர்ந்து வந்தேன்.

ஆனால், இப்பொழுது எங்களின் திட்டப்படி நாங்கள் புதுப்புது இடங்களை சுற்றிப்பார்க்க விருப்பப்படுகிறோம். முதலில் இந்தியாவில் இருக்கும் பல முக்கியமான இடங்களை பார்த்துவிட்டு, பிறகு வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை விரும்புகிறோம்” என்று தோனி பேசியதை பதிவிட்டுள்ளார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com