EVM - "டெக்னிக்கலாக முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்கிறது": முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி

தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி இதைப் பற்றியெல்லாம் பேசியிருக்க வேண்டும். ஆனால்,அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை.
SY quraishi
SY quraishiSY quraishi

தேர்தல் ஜூரம் பற்றிக்கொள்ள துவங்கியிருக்கிறது. ஒவ்வொருமுறையும் 100% மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பிரசாரங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபடும். அதே சமயம், இன்னொரு பக்கம், சண்டிஹர் மேயர் தேர்தலில் நடந்தது போல, தேர்தல் அதிகாரியே ஒரு தலைபட்சமாக நடந்துகொள்ளும் காட்சிகளையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். Samsung Galaxy Tab S9 Series நடத்திய ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் முன்னாள் இந்திய தேர்தல் அதிகாரியான SY குரேஷியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடனான உரையாடலிலிருந்து,

Q

சண்டிஹாரில் நடந்தது போன்ற விஷயங்களை தினசரி பார்க்கும் ஒரு சராசரி இந்திய குடிமகனுக்கு இந்த சிஸ்டம் மேல் என்ன நம்பிக்கை வரும்..?

A

இந்த சிஸ்டத்தின் மீது சராசரி மனிதன் நம்பிக்கை இழந்துகொண்டிருப்பதுதான் மிகவும் வருத்தத்தற்குரிய விஷயம். நீங்கள் அப்படி நடக்கிறது என நினைத்தால், நடக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். இந்த வழக்கின் தீர்ப்பை 24 மணி நேரத்திற்குள் வழங்கியிருந்தால், நிச்சயம் இந்திய குடிமகனுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கும்.

SY quraishi
பாஜகவைப் பொறுத்தவரை தெற்கு சரியான முடிவை எடுக்கிறது : வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்
Q

இந்திய தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையிலும் மாற்றம் அறிவித்திருக்கிறார்களே..!

A

இப்போது இவர்கள் பரிந்துரைத்திருக்கும் நடைமுறை என்பது மிகவும் மோசமானது. பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என இந்த மூவர் கூட்டணியில் ஏற்கெனவே 2:1 இருக்கிறது. அதற்கு மேல் இந்த கொலிஜீயத்தில் என்ன முடிவுகளை நாம் எதிர்பார்க்க முடியும்.கொலிஜியத்தை கோமாளித்தனமாக்கி வருகிறார்கள். அங்கே உச்சநீதிமன்ற நீதிபதி இருக்க வேண்டும். உண்மையில் இது கொலிஜியமா..?

Q

சட்டங்களே இப்படி இருக்கும் போது, அடுத்து என்ன நடக்கும் என நினைக்கிறீர்கள்..?

SY quraishi
மனிதனின் வலியை ஒருநாளும் AIயால் பிரதிபலிக்க முடியாது... காரணம் சொல்லும் பிரிட்டிஷ் நாவலாசிரியர்..!
A

நிறைய கேள்விகள் இருக்கின்றன. இந்தியாவில் ஜனநாயகத்தின் சோதனை காலம் இது. இந்திரா காந்தி ஆட்சி செய்த காலம் இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். எமெர்ஜென்சி இருந்தது. மக்கள் இப்போது அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைபெறுவதாக சொல்கிறார்கள். எமெர்ஜென்சி காலத்தில் எதுவெல்லாம் நடந்ததோ, அதுவெல்லாம் தற்போது நடப்பதாக சொல்கிறார்கள். அரசியல் அமைப்பின்படி எல்லாவற்றையும் எமெர்ஜென்சி என சொல்லாமலே நடத்திக்கொண்டுவருகிறார்கள். இப்போது ஆட்சி செய்பவர்கள் இந்திய அரசியல் அமைப்பையே மாற்றிவிடுவார்கள் என எச்சரிக்கிறார்கள். நான் அப்படியெல்லாம் நம்பவில்லை. அவர்களால் இதற்குள்ளேயே எல்லாவற்றையும் எளிதாக செய்ய முடிகிறது. அவர்கள் ஏன் இதை மாற்றப் போகிறார்கள். அவர்களால் நினைத்ததை எல்லாம் செய்ய முடிகிறது.

Q

சண்டிஹரில் நடந்தது வெறும் டிரைலர் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே.

A

இப்போது ஏன் பேலட் பேப்பர் , EVM பயன்படுத்தி இருக்கலாமே என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் ஏன் EVMற்கு மாறினோம் என்பதையும் இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது பூத்களையே எளிதாக கைப்பற்றி வாக்குகளை போட்டுக்கொண்டு இருந்தார்கள். அதனால் எதிர்க்கட்சிகளும் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

Q

EVMலும் பிரச்னைகள் இருக்கத்தானே செய்கிறது... Manipulation வாய்ப்பிருக்கிறதா..?

A

நான் இதுநாள் வரையில் EVMல் எந்தவொரு முறைகேட்டையும் பார்த்ததில்லை. ஆனால், இப்போது சில சிக்கல்கள் இருக்கின்றன. EVMன் பாதுகாப்பு என்பது ராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். எந்தவொரு தனியார் அமைப்பும் இதில் தலையிட முடியாது. EVMகளை தனியார் அமைப்புகள் பரமாரிக்கப் போவதாக படித்தேன். அப்படியெனில் வாரங்கள், ஏன் மாதக்கணக்கில் கூட EVM மெசின்கள் தனியார் வசம் தான் இருக்கப்போகின்றன. இது மிகவும் மோசமான நடைமுறை. தேர்தல் ஆணையம் இதுகுறித்து வெளிப்படைத்தன்மையான அறிக்கையை வெளியிட வேண்டும். பெல் நிறுவனத்தின் நான்கு இயக்குநர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள். அதனால் டெக்னிக்கலாக EVMகளில் முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்கிறது. தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி இதைப் பற்றியெல்லாம் பேசியிருக்க வேண்டும். ஆனால்,அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை.

Q

இத்தனை சிக்கல்களுக்கு இடையே தேர்தல் ஆணையம் 100% மக்கள் வாக்களிக்க வேண்டும் என பேசிக்கொண்டு இருப்பது..

A

நியாயமான கேள்வி தான். மக்களுக்கு முதலில் நம்பிக்கையை வரவழைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com