மனிதனின் வலியை ஒருநாளும் AIயால் பிரதிபலிக்க முடியாது... காரணம் சொல்லும் பிரிட்டிஷ் நாவலாசிரியர்..!

டேனியல் கிரெய்க் கொஞ்சம் ரஃப். ரொமான்ஸோ அதிரடியோ எனக்கு கானரி தான். பாண்ட் என்றால் ஜான் கானரி தான்.
Nicholas Shakespeare
Nicholas ShakespeareNicholas Shakespeare

Samsung Galaxy Tab S9 Series நடத்திய ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் உலகின் தலைசிறந்த நாவல் ஆசிரியர்களுள் ஒருவரான நிக்கோலஸ் சேவியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புனைவு, அபுனைவு என இருவேறு களங்களில் பெரும் ஆளுமை பெற்றவர் அவர் எழுதிய சரிதை புத்தகம் குறித்து பேச வந்திருந்தார். ஜேம்ஸ் பாண்டு என்னும் புனைவு கதாபாத்திரன் ஆன்மாவான Ian flemingன் சரிதையை எழுதியிருக்கும் நிக்கோலஸ் சேக்‌ஷ்பியர் பேசியதிலிருந்து,

Q

நீங்கள் ஒரு பத்திரிகையாளராகவும் இருக்கிறீர்கள். அதே சமயம், நாவலும் எழுதுகிறீர்கள். கிட்டத்த Ian Flemingங்கும் இப்படியான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இரண்டையும் சமாளிப்பது சுலபமாக இருக்கிறதா..?

Jaipur Literature Festival
Jaipur Literature Festival
A

நான் பத்திரிகையாளராக இருந்தபோதே நாவல்கள் எழுதத் தொடங்கிவிட்டேன். ஆனால், இரண்டுமே என் வாழ்வாதாரத்துக்கு பெரிதாக உதவவில்லை. சினிமாக்களுக்கு எழுத ஆரம்பித்த பின்னர் தான் என் வாழ்க்கைத்தரம் மாறியது. IAN flemingன் கதை வேறு. அவருக்கு அப்போதே ஜேம்ஸ் பாண்டு கதைகளுக்காக பணம் கொட்டியது. பிரபலங்களுக்கு பப்லிஷர்கள் கோடிகளில் கொட்டிக் கொடுப்பார்கள். அவர்களைக் குறை சொல்லியும் நியாயமில்லை. அவர்களும் தர்மத்துக்கு தங்களின் நிறுவனத்தை நடத்த முடியாதல்லவா..?

Q

இது ஒரு நாள் திரைக்கதையாகும் என்பதை மனதில் வைத்து நாவலை எழுதுகிறீர்களா..?

A

அப்படியெல்லாம் இல்லை. என் மனதிலிருந்து எழும் சொற்களை நாவலாக எழுதுகிறேன். அது திரைக்கதையாக மாறினால் மகிழ்ச்சி. அவ்வளவு தான்.

Q

தற்போதைய சூழலில் AI பல எழுத்தாளர்களைப் போல அச்சு அசலாக எழுதுகிறது. AI குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன..

Nicholas Shakespeare
பாஜகவைப் பொறுத்தவரை தெற்கு சரியான முடிவை எடுக்கிறது : வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்
A

AI எழுத்தாளர்களைப் போல எழுதுவது இருக்கட்டும். முதலில் எந்தவித காப்புரிமையும் இல்லாமல் எங்கள் பதிவுகளை வைத்து chatgpt என்னும் செயற்கை நுண்ணறிவு பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டதாக சமீபத்தில் படித்தேன். அதற்கான வழக்குகளை அந்த நிறுவனங்கள் விரைவில் சந்திக்க நேரிடும். சரி, உங்கள் கேள்விக்கு வருவோம். வில்லியம் வேர்ட்ஸ்வர்த் போல, சேக்ஸ்பியர் போல சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த ஆளுமைகளை பிரதியெடுத்து அதைப்போலவே AI எழுதுவதாக நானும் படித்தேன். சரிதைகளை AIயால் நிச்சயம் எழுத முடியும். ஆனால் அதற்கான தரவுகளை மனிதர்கள் தான் கண்டெடுக்க வேண்டும். ஆனால், மனிதர்களின் கற்பனைத்திறனை ஒரு நாளும் AIயால் பிரதியெடுக்க முடியாது. ஒரு கவிஞன் ஒருவிஷயத்தை எழுதியதும், திருப்தியில்லாமல் அதை அழிக்கக்கூடும். பின்பு மீண்டும் எழுதுவான். அதோடு அவன் வாழ்வில் சந்தித்த ஏமாற்றங்களும், வலிகளும் கூட அந்த எழுத்துக்குள் கலந்திருக்கும். மனிதனைன் வலியை ஒருநாளும் AIயால் பிரதியெடுக்க முடியாது.

Q

பாண்ட் கதாபாத்திரத்துக்கு சாவே கிடையாது என உங்களின் பழைய பேட்டி ஒன்றில் பேசியிருந்தீர்கள். சமீபத்தில் வெளியான பாண்ட் திரைப்படத்தில் பாண்டாக நடித்த டேனியல் கிரெய்க் இறந்துவிடுகிறார். நீங்கள் படம் பார்க்கும் போது, இதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்..?

A

அது டேனியல் கிரெய்கின் விருப்பம் அவ்வளவுதான். அடுத்த பாகத்தில் நிச்சயம் வேறு ஏதாவது காரணம் சொல்வார்கள் . நாள்தோறும் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தில் பாண்டின் ரெபரென்ஸ் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. அவ்வளவு எளிதாக பாண்ட் கதாபாத்திரத்தை யாரும் கொன்றுவிட முடியாது.

Q

உங்களைப் பொறுத்தவரையில் யார் சிறந்த பாண்ட்..?

Sean Connery
Sean Connery
A

எனக்கு ரொம்ப வயசாகிடுச்சு... என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த பாண்ட் கானரி தான். எல்லோரும் சிறப்பான பாண்ட் தான். டேனியல் கிரெய்க் கொஞ்சம் ரஃப். ரொமான்ஸோ அதிரடியோ எனக்கு கானரி தான். பாண்ட் என்றால் ஜான் கானரி தான்.

Nicholas Shakespeare எழுதிய புத்தகங்கள்..!

Nicholas Shakespeare books
Nicholas Shakespeare booksNicholas Shakespeare

The sandpit

Six Minutes in May

Stories from other places

Priscilla

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com