சக்கர வியூகம் 3 | வாழ்வை மாற்றும் மந்திரம்

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் மூன்றாம் அத்தியாத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 3
சக்கர வியூகம் 3புதிய தலைமுறை

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்

சக்கர வியூகம் குறுநாவல்
சக்கர வியூகம் குறுநாவல்

அனைத்தையும் பகிர்ந்த பின் என் முடிவையும் சேர்த்து தீர்க்கமாகச்சொன்னேன்.

“இன்று என் வாழ்விற்கு இறுதி நாள் ஸ்வாமி, இந்த உலகத்துல எனக்கான இடம் இனிமே இல்லை” என்றேன் அழுகையூனேடே சிரித்தார், பின் ஆழ்ந்து என்னைப்பார்த்தார். என் இடக்கையின் நாடியை பலமாக அழுந்தப்பிடித்தபடி கண்களை மூடிக்கொண்டார். சில நொடிகளுக்குப்பிறகு கண்களைத்திறந்து,

”எல்லாருடைய இறுதி நாளும், அவனின்றி வேறு யாருக்கும் தெரியாதம்மா. ஒன்று சொல்கிறேன். இன்றல்ல, நாளை பிறக்கும் நாள் உன் புது வாழ்வின் முதல் நாள். உன் வலிகளின் பாதி, இதோ இந்த நாடித்துடிப்பின் வழி என்னிடம் சேர்ந்தது. போ. இந்த கோவில் பிரசாதம் உண்டு நன்கு உறங்கு. எழுகையில் இவ்வாழ்வு உன் வசப்படும் என்றார், புன்முறுவலுடன், தீர்க்கமாக.

கையில் ஒரு எலுமிச்சம்பழத்தைக்கொடுத்து, இது மந்திரிக்கப்பட்ட, சில ரசாயனங்கள் சேர்த்து வலுவேற்றப்பட்ட எலுமிச்சை. என்றுமே வாடாத எலுமிச்சை. நற்பேறுகளை உன் வாழ்க்கைக்கு வழங்கப்போகும் அக்‌ஷய பாத்திரம். எப்போதும் இனி உன்னிடமே இருக்கட்டும். எந்த நிலையிலும் இதை கைவிடாதே. வாழ்வில் நீ செல்லப்போகும் பல உச்சங்களுக்கு இது உனக்கு வழித்துணை. இறையை நம்பு, உன் வாழ்வு செழிக்கும்.

அடுத்த சில நாட்கள் இது உன் கைப்பையில் இருக்கட்டும். இதற்குப்பின்னும் உனக்கு தற்கொலை எண்ணம் போகவில்லையென்றால் இதையே நறுக்கிப்பிழிந்து குடி. அது உன் விதியை தீர்மானிக்கட்டும், பின்னர் யார் சொல்லும் கேளாமல் உன் வழி போ” என்றார்.

அசரீரி போலத்தான் இருந்தது. வலி குறைந்திருப்பது போலத்தான் இருந்தது. அழுததில் பாரம் குறைந்திருந்தது. ஸ்வாமியிடம் பேசி முடித்த பிறகு அங்கு சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது. எத்தனை வேளைகள் ஆகியிருந்தது சாப்பிடாமலிருந்து என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் அது தேவாமிர்தமாக சென்று வயிற்றை நிறைந்தது.

சக்கர வியூகம் 3
சக்கர வியூகம் 1 | ஆதி

நிறைந்த வயிற்றுக்கு சற்று நிதானமாக யோசிக்கவும் சொல்லிக்கொடுத்தது. என் பிரச்னைகள் அப்படியேதான் இருந்தன. என்ன, சற்று ஆறுதல் கிடைத்திருக்கிறது. ஒரு மந்திரிக்கப்பட்ட எலுமிச்சம்பழமும். அந்தச்சிறிய வஸ்து என் வாழ்வை மாற்றுமென்றெல்லாம் தோன்றவில்லை. ஆயினும் என்ன, செய்யவேண்டியதை சற்றுப் பொறுத்துச்செய்யலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

சக்கர வியூகம் 3
சக்கர வியூகம் 2 | தேவதைகளும் சாத்தான்களும்

என் தற்கொலை முடிவை ஒரு நாள் தாமதிக்க முடிவெடுத்தேன். அப்படியென்னதான் ஆகிவிடப்போகிறது என்று பார்த்துவிடலாம் என்ற துணிவு என் மனதை ஆக்கிரமிருந்தது.

ஒரு நாள், ஒன்றும் மோசமில்லை. ஒரு மாதம் முழுக்க துன்பங்களோடுதான் தள்ளிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு நாளை இந்த சாமியாருக்காக தள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டேன். அந்த இரவு சற்று நிம்மதியாகத்தூங்கினேன். அத்தனை நாள் அயர்வும் அன்றைய இரவை அழுத்தியது. உறக்கம் போன்றே அந்தக்காலையும் அவ்வளவு நிம்மதியாக விடியும் என்று அந்த இரவுக்கனவில் கூட நினைக்கவில்லை.

(அடுத்த வாரம் தொடரும்...)

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com