\
Celebrating Life Through 'Zorba the Greek' | Nikos Kazantzakis
ஸோர்பா தி கிரீக்’AI

வாழ்க்கையை முழுமையாகக் கொண்டாடடும் ‘ஸோர்பா தி கிரீக்’ | நாவல் அறிமுகம்

வாழ்க்கையை அதன் அத்தனை பரிமாணங்களோடும் கொண்டாடத் தூண்டும் உலகப் புகழ்பெற்ற நாவல்தான் நிக்கோஸ் கசான்சாகிஸ் ’ஸோர்பா தி கிரீக்.
Published on: 

மனித மனத்தின் சுதந்திர வேட்கையையும், வாழ்வியல் உண்மைகளையும் மிக அழகாகப் பதிவு செய்த உலகப் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றுதான் கிரேக்க எழுத்தாளர் நிக்கோஸ் கசான்சாகிஸின் ‘ஸோர்பா தி கிரீக்’. 1946ஆம் ஆண்டு வெளியான இந்த நூல், கடந்த பல தசாப்தங்களாக உலகெங்கிலும் உள்ள இலக்கிய ஆர்வலர்களின் மனங்களைக் கவர்ந்து வருகிறது. இந்த நாவலின் கதைக்களம் மிக சுவாரசியமானது. புத்தகப் படிப்பிலும், தீவிரமான தத்துவ சிந்தனைகளிலும் மட்டுமே மூழ்கியிருக்கும் ஒரு இளம் அறிவுஜீவி, தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைத் தேடுகிறார். அந்தத் தருணத்தில், ஒரு தீவுக்குச் செல்லும் பயணத்தில் அவர் தற்செயலாகச் சந்திக்கும் வயதான உழைப்பாளிதான் ஸோர்பா. இந்தச் சந்திப்புதான் கதையின் திருப்புமுனை!

ஸோர்பா தி கிரீக்
ஸோர்பா தி கிரீக்AI

முறையான கல்வி எதையும் கற்காத, ஆனால் வாழ்க்கையின் அத்தனை பாடங்களையும் அனுபவங்கள் மூலம் கற்றறிந்த சுறுசுறுப்பானவர்தான் ஸோர்பா. எந்தக் கவலையையும் தன் மீது சுமக்காத அவரிடம், இசையும் நடனமும் உழைப்பும் உயிரோட்டமாக இருக்கும். ஸோர்பாவின் இந்த அணுகுமுறை, புத்தகங்களிலேயே ஊறிப்போயிருந்த அந்த இளம் அறிவுஜீவியின் உலகப் பார்வையை முழுமையாக மாற்றுகிறது. துக்கங்களையும், எதிர்பாராத தோல்விகளையும் எப்படி எதிர்கொள்வது, ஒவ்வொரு நொடியையும் எப்படி ரசித்து வாழ்வது என்ற மிக உன்னதமான தத்துவத்தை ஸோர்பா தன் நடத்தை மூலம் நமக்குச் சொல்லித் தருகிறார். இந்நூலின் ஆசிரியர் நிக்கோஸ் கசான்சாகிஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் தூண்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

Celebrating Life Through 'Zorba the Greek' | Nikos Kazantzakis
இந்தியாவில் நெருக்கடி நிலை; இந்திராகாந்தி செய்தது தவறு - சோனியாகாந்தி

நாவலாசிரியர், பத்திரிகையாளர், கவிஞர் மற்றும் தத்துவவாதியான இவர், மனித ஆன்மாவின் சுதந்திரம் குறித்தும், ஆன்மிகத் தேடல் குறித்தும் ஆழமான பல நூல்களை எழுதியுள்ளார். இவரின் எழுத்துகளுக்கு உலகெங்கிலும் லட்சக்கணக்கான வாசகர்கள் உள்ளனர். ‘ஸோர்பா தி கிரீக்’ நாவலின் இளம் அறிவுஜீவி இவரே. நிக்கோஸ் கசான்சாகிஸின் ‘ரிப்போர்ட் டூ க்ரெக்கோ' என்ற சுயசரிதை நாவலிலும் ஸோர்பாவுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஸோர்பாவைப் பற்றி பிரபல ஆன்மிக ஞானி ஓஷோ ‘ஸோர்பா தி புத்தா’ எனும் நூலை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’ஸோர்பா தி கிரீக்’ நாவல் இதே பெயரில் திரைப்படமாக உலக அரங்கில் வெளிவந்து மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்று, உலகளவில் மாபெரும் கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தியது.

Prime video

வெறும் கதைப் புத்தகமாக மட்டுமின்றி, நம்முடைய அன்றாட வாழ்வியலுக்கான ஒரு வழிகாட்டியாகவும் இந்த நாவல் திகழ்கிறது. வாழ்க்கையை அதன் அத்தனை வண்ணங்களோடும், அத்தனை உணர்வுகளோடும் அனுபவிக்க விரும்புவோர் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு பொக்கிஷப் புத்தகம் இந்த ‘ஸோர்பா தி கிரீக்’. தமிழில் இந்த நாவல் ‘சோர்பா என்ற கிரேக்கன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Celebrating Life Through 'Zorba the Greek' | Nikos Kazantzakis
நக்சலிசத்தின் அச்சுறுத்தல் முடியவில்லை..பிரதமர் மோடி அதிரடி குற்றச்சாட்டு