\
naxals
naxalsreuters

நக்சலிசத்தின் அச்சுறுத்தல் முடியவில்லை..பிரதமர் மோடி அதிரடி குற்றச்சாட்டு

காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சல்களை ஒழித்துவிட்டோம்.. ஆனால், நக்சலிசத்தின் அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.. என பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்..
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பல தசாப்தங்களாக மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது நக்சலிசம். பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள், அரசு கட்டமைப்புகளைச் சேதப்படுத்துவது எனப் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் இந்த அமைப்புகள் ஈடுபட்டு வந்தன. இதனை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் நக்சலிசம் முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

narendira modi
narendira modi ani

இத்தகைய சூழலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்ள CRPF-ன் CoBRA படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி உரையாற்றினார். அப்போது, நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகப் பாராட்டினார். மேலும், நாட்டின் நக்சல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைந்துள்ள நிலையில் கொண்டாடப்படும் தீபாவளி இது என்றும் குறிப்பிட்டார்.

நக்சலிசம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அதே நக்சலிசத்தின் அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதாக மோடி பேசியதுதான் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது. அதாவது, காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சல்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், 'Dimagi Naxals' என்று அவர் குறிப்பிட்ட அறிவுசார் நக்சலைட்டுகள் பல்வேறு அமைப்புகளுக்குள் ஊடுருவியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, அரசியல் கட்சிகளுக்குள்ளும் இவர்கள் ஊடுருவியிருப்பதாகவும், இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

PM MOdi
PM MOdiANI

இதுபோன்ற சக்திகளை அடையாளம் கண்டு, அவற்றின் செயல்பாடுகளை முறியடிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட் குழுக்களை ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் சித்தாந்தத்தை ஆதரிப்பதாகக் கூறப்படும் வலையமைப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, ஆயுதம் ஏந்திய நக்சல்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், அவர்களின் சித்தாந்தம் பல்வேறு அமைப்புகளுக்குள் தொடர்ந்து செயல்படுவதாகப் பிரதமர் மோடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தற்போது புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

naxals
உ.பி. பெண்களுக்கு ஜாக்பாட்.. 50 ஆயிரம் நிதியுதவி? யோகி அரசு ஆலோசனை!