சாக்லேட் கேக் செய்யணுமா..? இதோ எளிமையான ரெசிபி!
குழந்தைகள் அனைவருக்கும் சாக்லெட் என்றாலே மிகவும் பிடிக்கும்.. அதிலும் சாக்லெட் கேக் என்றால் கேக்கவே வேண்டாம்.. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.. அத்தகைய குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லெட் கேக்கை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. ஆமாங்க இந்த வாரம் வரும் வார விடுமுறைக்கு இந்த சாக்லெட் கேக்கை செய்து, குழந்தைகளுக்கு சர்பிரைஸ் கொடுத்து அசத்துங்க.. வாங்க அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளாலாம்..
சாக்லேட் கேக் செய்ய தேவையான பொருட்கள்
1. மாவு – 2 கப்
2. பேக்கிங் பவுடர் - 1 ½ டீஸ்பூன்
3. சமையல் சோடா - 1 ½ டீஸ்பூன்
4. வெள்ளை சர்க்கரை - 2-3 டீஸ்பூன்
5. கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்
6. உப்பு (சுவைக்கேற்ப)
7. முட்டைகள் - 2
8. பால் - 1 கப்
9. வெஜிடெபிள் ஆயில் - 1-2 டீஸ்பூன்
10. வெண்ணிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
சாக்லேட் கேக் செய்முறை:
1. ஒரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரை, மாவு, கோகோ, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
2. அதன் பிறகு முட்டை, பால், எண்ணெய் மற்றும் வெண்ணிலாச் சாற்றை அதில் சேர்க்க வேண்டும்..
3. இப்போது மிக்சரை மீடியம் ஸ்பீடில் வைத்து 1-2 நிமிடங்கள் நன்றாக அடித்துக் கொள்ள்ள வேண்டும். உங்கள் கேக் மாவை சாஃப்ட்டாக மாற்ற அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. அதன் பின்னர் ஓவன் அடுப்பின் வெப்பநிலையை 350 F (180 C) ஆக செட் செய்ய வேண்டும். பின்பு அதில் இரண்டு வட்ட வடிவ பாத்திரங்களை வைத்து அவற்றில் வெண்ணெய்யை நன்றாக தடவி விட வேண்டும். பின்னர் அதில் கேக் மாவை ஊற்றி விட வேண்டும்..
4. இப்போது கேக்கை ஓவன் அடுப்பில் 35 முதல் 40 நிமிடங்கள் ஆகும் வரை வைத்து சூடாக்க வேண்டும்.. அது சரியாக வெந்ததா இல்லையா என்பதைச் சரிபார்க்க ஒரு சுத்தமான டூத்பிக்-கை பயன்படுத்தவும்.
5. 10 நிமிடங்களுக்குப் பிறகு, பாத்திரங்களை ஒரு கம்பி ரேக்கில் வைத்து குளிர்விக்கவும். அது குளிர்ந்ததும், கேக்கை வெளியே எடுத்து பரிமாறலாம்..
6. இந்த ரெசிபியை குக்கரிலும் செய்யலாம்..