டிரெண்டாகும் புல்லட் காபி.. உடல் எடையை குறைக்குமா?
காலையில் எழுந்த உடனேயே காபி குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவேன் என சிலர் இருப்பார்கள்.. அப்படி அவர்கள் குடிக்கும் காபியில் பால், சர்க்கரை என கார்போஹைட்ரேட்டை அதிகமாக்கும் விஷயங்கள்தான் அதில் அதிகமாக இருக்கும்.. அதுவே உடல் எடை அதிகமாகவும் சர்க்கரை வர காரணமாகவும் இருக்கலாம். இனிமேல் அப்படி குடிக்கக் கூடாது என பலர் நினைப்பதுண்டு.. ஆனால் அவர்களால் காபி குடிக்காமல் இருக்கவே முடியாது.. அப்படிப்பட்டவர்கள் இனி கவலை பட வேண்டாம்..
நீங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் புல்லட் காபியை குடிக்கலாம்.. இது புல்லட் ப்ரூப் காபி என்றும் அழைக்கப்படுகிறது. அது உடலில் ஆற்றல் அதிகரிப்பு, மனநிலை மேம்பாடு, மற்றும் பசியைக் கட்டுப்படுத்துதல் போன்ற வேலைகளை செய்கிறது.. அத்துடன் உங்களின் வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.. வாங்க அந்த புல்லட் காபியை எப்படி வீட்டிலேயே போட்டுக் குடிப்பது என்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் ..
புல்லட்புரூஃப் காபியின் நன்மைகள்
புல்லட் காபி, கொழுப்பை எரிபொருளாக மாற்றுகிறது.இதனால் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது... சில ஆய்வுகள் புல்லட் காபி பசியைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவும் என்று கூறுகிறது.மேலும் இது பசியை கட்டுபடுத்துவதினால் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது. அத்துடன் இதில் கலக்கப்படும் நெய்யில் மீடியம் செயின் ட்ரைக்கிளைசெரைட்ஸ் (MCTs) எனப்படும் நன்மை செய்யும் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை காபியுடன் இணைந்து, காஃபின் தரும் தீங்குகளைக் கடந்து உடலுக்கு தொடர்ந்து சக்தியை அளிக்க சிறந்த முறையில் உதவி புரியும்.மேலும் நெய்யில் உள்ள ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் மூளையின் இயக்கங்களை நன்றாக வேலைசெய்ய வைக்கும். அத்துடன் இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுமாம்..
பொதுவாகவே நமது உடலில் ஹார்மோன்கள் உற்பத்தியாவதற்கு நெய் மற்றும் ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் தேவை. புல்லட் காபி தொடர்ந்து அருந்தும்போது ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்துக் கொள்கிறடு.. இதனால் உடல் ஆரோக்கியமடையும்.மேலும் நெய்யில் கொழுப்பில் இருக்கக்கூடிய வைட்டமின் A, D, E மற்றும் K ஆகியவை அதிகம் உள்ளன. இவை எலும்புகள், முடி மற்றும் சரும ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவி புரியும். இந்த நெய்யை காபியுடன் கலந்து காலையில் அருந்தும்போது உடலுக்கு அதிகளவு ஊட்டச் சத்துக்கள் கிடைக்கிறது.. மேலும் இது செரிமானம் சீரான முறையில் நடைபெறவும் உதவி புரிகிறது..
இந்த புல்லட் புரூஃப் காபியை தினமும் காலையில் குடிப்பதால் உடலுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும்..அத்தகைய நன்மைகளை கொடுக்கும் இந்த காபியின் ரெசிபியை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்..
புல்லட் புரூஃப் காபி செய்ய தேவையான பொருட்கள்
1. உங்களுக்கு விருப்பமான இன்ஸ்டன்ட் காபித்தூள் - 1½ டீஸ்பூன்
2. சூடான தண்ணீர் - 1 கப்
3. நெய் - 2 ஸ்பூன்
புல்லட் புரூஃப் காபி செய்முறை
முதலில் சூடான தண்ணீரில் உங்களுக்கு பிடித்தமான காபித்தூளைக் கொட்டி 2 முதல் 3 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் நெய் சேர்க்க வேண்டும். பின்னர் உடனே இந்தக் கலவையை மிக்சி அல்லது பிளெண்டர் மூலம் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.அத்துடன் உங்களின் விருப்பத்துக்கேற்ப இதில் பட்டைப்பொடி மற்றும் இந்துப்பு சேர்த்துக் கொள்ளலாம். இதை ஒரு கோப்பையில் ஊற்றி சூடாக குடிக்கலாம்.. தண்ணீரின் சூடு ஆறிபோகும் முன்பு இதையெல்லம் செய்து குடிக்க வேண்டும்.. அப்போதுதான் அந்த புல்லட் காபியின் ருசி மாறாமல் இருக்கும்.. கண்டிப்பாக அதில் சர்க்கரையை சேர்க்ககூடாது.. இதில் இருந்து உங்களுக்குத் தேவையான நல்ல கொழுப்பு மற்றும் கனிம சத்துக்கள் கிடைக்கும்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் எழுத்தாளருமான டேவ் ஆஸ்ப்ரே இந்த காபியை முதன் முதலில் தயாரித்து அறிமுகப்படுத்தினார்.