முதியவர்களுக்கு உகந்த உணவு எது? சுமார் 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சொல்வதென்ன?
வாழ்க்கையின் கடமைகளை முடித்து விட்டு அமைதியாக நாட்களை கழிப்பதற்கான பருவம் முதுமைப்பருவம். ஆனால் பலருக்கும் இது இனிமையானதாக இருப்பதில்லை. ஏனெனில் முதுமைப்பருவத்திற்கே உரிய நோய்கள் பாதிப்பதுதான் இதற்கு காரணம். சர்க்கரை நோயிலிருந்து மூட்டு வலியிலிருந்து பிரச்சினைகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், பிரபல நேச்சர் இதழில் வெளியான ஒரு கட்டுரை ஆரோக்கியமான முதுமைக்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என கட்டுகரையை வெளியிட்டுள்ளது.
காய்கறிகள், பழங்களை அதிகம் உண்பது காது, மூட்டு போன்ற இயல்பான முதுமை பிரச்சினைகள் அற்ற வாழ்க்கையை இனிதாக கழிக்க உதவும் என அறிவுறுத்துகிறது.
அக்கட்டுரை. 30 ஆயிரம் ஆண்கள், 70 ஆயிரம் பெண்களிடம் சுமார் 30 ஆண்டு ஆய்விற்கு பின்பே இந்த தகவல் கூறப்பட்டிருப்பது இதன் மதிப்பை அதிகரிப்பதாக உள்ளது. காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி நார்ச்சத்து மிகுந்த உணவுகள், பருப்பு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதே நேரம் இறைச்சி உணவை மிதமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது அக்கட்டுரை.
மெடிட்டரேனியன் பகுதியில் இது போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் எனவே அங்கே முதுமையிலும் ஆரோக்கியம் அதிகம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
எளிமையான இயற்கை முறை உணவுகள் முதுமைக்காலத்தில் உடல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை கட்டமைக்க உதவும் என்பதே இக்கட்டுரையின் சாராம்சமாக உள்ளது