உங்க தங்க நகைகள் எப்போதும் புதிதாக ஜொலிக்கணுமா? இதோ சில டிப்ஸ்..!
பெண்களுக்கு தங்க நகைகள் என்றாலே ரொம்ப பிடிக்கும்.. ஒரு குண்டுமணி தங்கமாவது அணியாமல் இருக்கமாட்டார்கள்.. அந்தளவிற்கு தங்கம் பெண்களுக்காவே உள்ள ஒரு உலோகமாக இருக்கிறது.. ஒவ்வொருவரின் வீட்டிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப தங்க நகைகள் நிச்சயம் இருக்கும். தங்க நகைகள் ஆடம்பரம், அழகு என பார்க்கப்பட்டாலும் தற்போதுள்ள காலக்கட்டத்தில் அது ஒரு நல்ல முதலீடாக பார்க்கப்படுகிறது. ஆம், அவசர தேவைகளுக்கு மற்றவர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்ப்பதற்கு தங்க நகைகளை அடமானம் வைத்தோ அல்லது விற்றோ நாம் நம்முடைய அவசர தேவைகளை பூர்த்திசெய்துக் கொள்ளலாம்..
இப்படி எல்லா வகையிலும் நமக்கு உதவியாக இருக்கும் தங்கத்தை பாதுகாப்பாகவும் புதிதாக இருக்கும்படி பராமரிக்கவும் வேண்டும் அல்லவா? அப்படி புதிதாக இருக்கும் தங்க நகைகளை விழாகளில் அணியும் போது பார்ப்பதற்கு மிகுந்த அழகாக இருக்கும் அல்லவா? வாங்க உங்க தங்க நகைகளாஇ எப்போதுமே புதிது போல ஜொலிக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
தங்க நகைகளை சுத்தம் செய்ய சில டிப்ஸ்
1. முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சில துளிகள் லேசான சோப்பு சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்.. பின்னர் அதில் தங்க நகைகளை போட்டு ஊற வைக்கவும். பிறகு, ஷாஃப்ட்டான டூத் பிரஷ் கொண்டு மெதுவாக அந்த நகைகளை தேய்க்க வேண்டும்.. பின்னர், சுத்தமான நீரில் கழுவி, மென்மையான துணியால் துடைத்து உலர வைக்க வேண்டும்.. இதில் முக்கியமாக சூடான தண்ணீரையோ? அல்லது குளிர்ந்த நீரையோ? பயன்படுத்தக்கூடாது.
2. பேக்கிங் சோடா ஒரு சிறந்த சுத்தப்படுத்தும் பொருள். இது அனைத்து வகையான உலோகங்களையும் நன்றாக சுத்தம் செய்யும்.. ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் நீர் சேர்த்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும்.. அதன் பிறகு அதை நகைகளில் தடவி, மென்மையான துணியால் துடைத்து, சுத்தமான நீரில் கழுவி உலர வைக்க வேண்டும்..
3. தங்க நகைகளை சுத்தம் செய்ய பிரத்யேக திரவங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, நகைகளை சுத்தம் செய்யலாம்.
4. வைரம் மற்றும் கற்கள் உள்ள நகைகளை சுத்தம் செய்ய, பிரத்யேக பிரஷ்களை பயன்படுத்தவும், குறிப்பாக ப்ரஷ்களைக் கொண்டு அதிகமாக தேய்க்கக்கூடாது. இதனால் கற்களின் ஜொலிக்கும் திறன் குறைந்துவிடும். அல்லது நகைக்கடைக்காரரிடம் கொடுத்து சுத்தம் செய்து கொள்ளவது நல்லது..
5. அதிகமாக அழுக்குப் படிந்துள்ள நகைகளை சுத்தம் செய்வதற்கு டூத் பிரஷ் அல்லது பெயின்ட் அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சிறிய ப்ரஷ்ஷைக் கொண்டு சுத்தப்படுத்தவும். லேசாக துடைத்தெடுத்தால் போதும். அதிக அழுத்தமாக தேய்க்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தங்க நகைகளை பாதுகாப்பாக பராமரிக்க டிப்ஸ்..
தங்க நகைகளை மற்ற நகைகளுடன் சேர்த்து வைக்காமல், தனித்தனியாக பெட்டிகளில் வைக்க வேண்டும்.. முக்கியமாக ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டும்.. நாம் அணித பிறகு அதில் வியர்வையோ அல்லது மழையில் நனைந்திருந்தாலோ அந்தனை உடனே அப்படியே கழட்டி நகை பெட்டியில் வைக்கக்கூடாது.. அப்படி வைத்தால் நகைகள் சீக்கிரமாக மங்கிவிடும்..
அப்புறம் அடிக்கடி தங்க நகைகளை அணியாமல் இருந்தால், அதன் பளபளப்பு அதிகமாக இருக்கும். நீங்கள் ஏதாவது வேலை செய்யப் போகிறீர்கள் என்றால், தங்க நகைகளை கழற்றி வைத்துவிடுவது நல்லது. தங்க நகைகளை பாதுகாப்பாக பராமரிக்க டிப்ஸ்..
அணிவதற்கான சில டிப்ஸ்
குளிக்கும் போதும், நீச்சல் அடிக்கும்போதும் கழற்றி வைப்பது நல்லது.. ஷாம்பு, சோப்பு போன்றவற்றில் உள்ள இரசாயனங்கள் தங்கத்தின் பளபளப்பை பாதிக்கும். ஒப்பனைப் பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது, தங்க நகைகளை கழற்றிவிடுவது நல்லது. இது போன்ற டிப்ஸ்களை பின்பற்றி தங்க நகைகளை எப்போதும் புதிதாக இருப்பது போலவே ஜொலிக்க வைக்கமுடியும்.. அதனால் இதை ட்ரை பண்ணி பாருங்கள்..