மத்திய அரசு வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்புமுகநூல்

மத்திய அரசில் இவ்ளோ வேலைவாய்ப்புகள் அறிவிச்சு இருக்காங்களா? விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3,131 காலிப் பணியிடங்களை நிரப்புப்புவதற்கான ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2025 எழுத்துத் தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Published on

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3,131 காலிப் பணியிடங்களை நிரப்புப்புவதற்கான ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2025 எழுத்துத் தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்

கீழ்நிலை எழுத்தர் (Lower Division Clerk - LDC), இளைய செயலாளர் உதவியாளர் (Junior Secretariat Assistant - JSA), தரவு உள்ளீட்டு இயக்குநர் (Data Entry Operator - DEO), தரவு உள்ளீட்டு இயக்குநர் - கிரேடு A (Data Entry Operator - Grade A)

கல்வித் தகுதி

எந்த பிரிவில் வேண்டுமானாலும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் DEO பதவிக்கு: அறிவியல் பிரிவில் கணிதம் உட்பட 12-ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது நிர்ணயம்

  • அடிப்படை வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை (01.01.2026 படி)

  • பிறந்த தேதி வரம்பு: 02.01.1999 முதல் 01.01.2008 வரை

வயது தளர்வுகள்

  • SC/ST வகுப்பினர்: கூடுதலாக 5 ஆண்டுகள்

  • OBC வகுப்பினர்: கூடுதலாக 3 ஆண்டுகள்

  • மாற்றுத்திறனாளிகள்: 10 முதல் 15 ஆண்டுகள் வரை

சம்பள விவரங்கள்

LDC/JSA பதவிகள்

  • மாதச் சம்பளம்: ₹19,900 - ₹63,200

DEO பதவிகள்

  • நிலை 4: ₹25,500 - ₹81,100

  • நிலை 5: ₹29,200 - ₹92,300

தேர்வு முறை

முதல் கட்டம் (Tier-I)

  • தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)

  • கேள்விகள்: 100 (பொருத்துவித வகை)

  • மொத்த மதிப்பெண்கள்: 200

  • நேரம்: 60 நிமிடங்கள்

  • எதிர்மறை மதிப்பெண்: தவறான விடைக்கு 0.50 மதிப்பெண் கழிக்கப்படும்

இரண்டாம் கட்டம் (Tier-II)

பிரிவு 1:

  • கணிதம்

  • பொது விழிப்புணர்வு

  • ஆங்கிலம்

  • கணினி திறன் மதிப்பீடு

பிரிவு 2:

  • திறமை தேர்வு / தட்டச்சு தேர்வு

மத்திய அரசு வேலைவாய்ப்பு
ISRO 2025: விண்ணப்பிக்க ரெடியா? 320 விஞ்ஞானி, பொறியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் விண்ணப்பம்

  • இணையதளம்: ssc.gov.in

  • விண்ணப்ப கடைசி தேதி: ஜூலை 18, 2025

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 19, 2025 (இரவு 11:00 மணி வரை)

முதல் கட்டத் தேர்வு (Tier-I CBT)

  • தேதிகள்: செப்டம்பர் 8 முதல் 18, 2025 வரை

முக்கிய குறிப்புகள்

  1. இந்த வேலைவாய்ப்புகள் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளன

  2. தேர்வு முழுக்க முழுக்க கணினி அடிப்படையில் நடைபெறும்

  3. விண்ணப்பம் முழுக்க ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்

  4. அனைத்து சான்றிதழ்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com