இஸ்ரோ காலிப்பணியிடங்கள் 2025
இஸ்ரோ காலிப்பணியிடங்கள் 2025முகநூல்

ISRO 2025: விண்ணப்பிக்க ரெடியா? 320 விஞ்ஞானி, பொறியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

இஸ்ரோ விஞ்ஞானி பதவிக்கு 39 காலிப்பணியிடங்கள் உள்ளன. சிவில், எலெக்ட்ரிக்கல், ரெபிரிகேரட்டின், ரெப்ஜினினேட்டர், ஏசி மற்றும் ஆர்கிடெக்சர் இன்ஜினியரிங்கள் படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Published on

இஸ்ரோவில் விஞ்ஞானி/ இன்ஜினியர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (ISRO Recruitment 2025) வெளியாகியுள்ளது. மொத்தம் 320 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது.

முக்கிய விவரங்கள்:

விண்ணப்ப காலக்கெடு: மே 27 முதல் ஜூன் 16, 2025 வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்

வயது தகுதி: ஜூன் 16, 2025 நிலவரப்படி 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித் தகுதி:

இஸ்ரோ குரூப் -ஏ பதவிகளான விஞ்ஞானி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 10 கீழ் சம்பளம் வழங்கப்படும்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் BE/B.Tech பட்டம் (65% மதிப்பெண்கள்)

மெக்கானிக்கல் பொறியியலில் BE/B.Tech பட்டம் (65% மதிப்பெண்கள்)

கணினி அறிவியல் பொறியியலில் பட்டம் (65% மதிப்பெண்கள் அல்லது 6.84/10 CGPA)

சம்பள விவரம்:

அடிப்படை சம்பளம்: மாதம் ₹56,100

மொத்த சம்பளம்: அனுபவ படிகள் மற்றும் படிகள் உட்பட மாதம் ₹84,360

தேர்வு நடைமுறை:

எழுத்துத் தேர்வு (120 நிமிடங்கள், இரண்டு பகுதிகள்)

பல தேர்வு வகை கேள்விகள் (எதிர்மறை மதிப்பெண் இல்லை)

தேர்ச்சிக்கு 50% மதிப்பெண்கள் தேவை

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 1:5 விகிதத்தில் நேர்காணலுக்கு அழைப்பு

நேர்காணல் 100 மதிப்பெண்களுக்கு (தேர்ச்சிக்கு 40% தேவை)

தேர்வு மையங்கள்:

எழுத்துத் தேர்விற்கு அகமதாபாத், பெங்களூரு, போபால், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புது தில்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

இஸ்ரோ காலிப்பணியிடங்கள் 2025
ஒரே இரவில் உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திய ரஷ்யா!

விண்ணப்ப முறை:

ISRO அதிகாரப்பூர்வ இணையதளம் (www.isro.gov.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் :

₹750 (SC/ST/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு முழு தொகையும், பொது பிரிவினருக்கு ₹500 திரும்ப கிடைக்கும்).

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com