மிசோரம் தேர்தல்: சரிசெய்யப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு; பிற்பகலில் வாக்களித்த முதல்வர் சோரம்தங்கா

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாமல் மிசோரம் சென்ற முதல்வர் சோரம் தங்கா பிற்பகலில் வாக்களித்தார்.
சோரம்தங்கா
சோரம்தங்காpt web

மிசோரமில் காலை 9 மணிவரை 12புள்ளி 8 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்ற அம்மாநில முதலமைச்சர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்கள் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 170 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தேர்தலையொட்டி, வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

வாக்களிக்க வந்த ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான சோரம் தங்கா, அய்ஸால் வடக்கு-2 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்றார். ஆனால், அங்கு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் முதலமைச்சரால் வாக்களிக்க முடியவில்லை. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்னர் வாக்களிப்பேன் எனத் தெரிவித்தார். மேலும், மிசோரத்தில் தொங்கு சட்டப்பேரவை இருக்காது என்றும் மிசோ தேசிய முன்னணியின் அரசு அமையும் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். பிற்பகல் 1 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதால் மிசோரம் முதல்வர் சோரம்தங்கா வாக்களித்துவிட்டுச் சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com