அடுத்த வேட்பாளர் பட்டியலை அறிவித்த காங். - கடப்பாவில் மோதும் YSR குடும்பம்..டஃப் கொடுப்பாரா ஷர்மிளா?

அகில இந்திய காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் 17 வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
ஜெகன், ஷர்மிளா, ராகுல், தேஜெஸ்வி
ஜெகன், ஷர்மிளா, ராகுல், தேஜெஸ்விpt web

17 வேட்பாளர்கள் பட்டியல்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒடிசா மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், ஆந்திரப்பிரதேசத்தின் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், பிகார் மாநிலத்தின் 3 தொகுதிகளுக்கான வேட்பாளரையும், மேற்குவங்கத்தில் ஒரு வேட்பாளர்களையும் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தமாக 17 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் INDIA கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப்பங்கீடு அண்மையில் முடிவடைந்தது. அதன்படி, மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 26 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் 9 மக்களவைத் தொகுதிகளும், இடதுசாரிகளுக்கு 5 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

பிகார் மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 வேட்பாளர்கள் முறையே கிஷன்கஞ்ச், கட்டிஹார், பாகலூர் போன்ற தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர். மூன்று தொகுதிகளுக்கும், வாக்குப்பதிவு என்பது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. கிஷன்கஞ்ச் தொகுதிக்கு முகம்மது ஜாவேதும், கட்டிஹார் தொகுதிக்கு தாரிக் அன்வரும், பாகலூர் மக்களவைத் தொகுதிக்கு அஜீத் சர்மாவும் போட்டியிடுகின்றனர்.

ஜெகன், ஷர்மிளா, ராகுல், தேஜெஸ்வி
சீட் பிரச்னையால் பூதாகரமாகும் உட்கட்சி பூசல்; கர்நாடக பாஜகவில் வெடிக்கும் போராட்டம்.. நடப்பது என்ன?

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா காங்கிரஸ் கூட்டணி

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் காங்கிரஸ் கூட்டணி பிகாரில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திரப்பிரதேசம்

ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும் 175 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலும் ஒரே கட்டமான மே 13-ம் தேதி நடைபெற உள்ளது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. எஞ்சிய 3 தொகுதிகளில் மட்டுமே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஒய்.எஸ்.ஆர்.சி.பி 49.9% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தெலுங்கு தேசம் 40.2% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ மொத்தமாகவே 1.3% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

ஆந்திர பிரதேசத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 வேட்பாளர்களில் பலரும் எதிர்பார்த்தபடியே, கடப்பா தொகுதியில் ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டியிடுகிறார். காக்கிநாடா மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரான பல்லம் ராஜூ போட்டியிடுகிறார். இவர் 1989, 2004, 2009 என மூன்று முறை அத்தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்.

ஜெகன், ஷர்மிளா, ராகுல், தேஜெஸ்வி
"கச்சத்தீவு குறித்து எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பேசலாம்" - நிர்மலா சீதாராமன்

ஒய் எஸ் ஆர் குடும்பத்தின் கோட்டை கடப்பா 

கடப்பா மக்களவைத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்தைச் சேர்ந்த அவினாஷ் ரெட்டி போட்டியிடுகிறார். கடப்பா மக்களவைத் தொகுதி என்பது ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தின் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், ராஜசேகர ரெட்டி இத்தொகுதியில் 4 முறை எம்பியாக இருந்தவர். அதற்கு பிறகு அவரது இளைய சகோதரர் விவேகானந்த ரெட்டி அத்தொகுதியில் வெற்றி பெற்றார். அவருக்கு பிறகு 2009 ஆம் ஆண்டு தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி அத்தொகுதியில் இருந்து எம்பியானார். 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், 2011 மே மாதத்தில் நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி ஆனார். ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கியப் பின், அக்கட்சியின் சார்பில் அவினாஷ் ரெட்டி 2014 மற்றும் 2019 என இருமுறை எம்பியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவினாஷ் ரெட்டிக்கு எதிராக ஷர்மிளா காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.

அவினாஷ் ரெட்டி, ஜெகன்
அவினாஷ் ரெட்டி, ஜெகன்

ஆனால், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் மிக பலவீனமாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில், கடந்த தேர்தலில், அவினாஷ் ரெட்டி 7 லட்சத்து 83 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த தெலுங்கு தேசம் கட்சியின் நாராயண ரெட்டி 4 லட்சத்து 2 ஆயிரத்து 773 வாக்குகளைப் பெற்றார். ஆனால் மூன்றாவது இடம் பிடித்த காங்கிரஸ் கட்சியோ மொத்தமாகவே 8 ஆயிரத்து 341 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

ஜெகன், ஷர்மிளா, ராகுல், தேஜெஸ்வி
"கச்சத்தீவு; தமிழக மீனவர் பிரச்னைக்கு பாஜகவே காரணம்" - வரலாற்றை விளக்கும் பத்திரிகையாளர் அய்யநாதன்!

கடப்பா மக்களவைத் தொகுதியில் மொத்தமாக 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் புலிவெந்துலா தொகுதியும் ஒன்று. இதுவும் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிதான். 7 சட்டமன்ற தொகுதிகளிலுமே கடந்த தேர்தல்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

கடப்பா மக்களவைத் தொகுதி ஒய் எஸ் ஆர் குடும்பத்தின் கோட்டை. அதேசமயத்தில் ஷர்மிளாவும் ஒய் எஸ் ஆர் வாரிசு என்பதால் போட்டி பலமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com