ஒரே நேரத்தில் பாஜகவிற்கு 8 முறை வாக்கு.. எண்ணி எண்ணி காட்டிய இளைஞர்

உத்தரப் பிரதேச மாநிலத்தில், இளைஞர் ஒருவர் பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த விவகாரம் குறித்து அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
வாக்களித்த இளைஞர்
வாக்களித்த இளைஞர்pt web

உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத் மக்களவை தொகுதியில், முகேஷ் ராஜ்புத் என்பவர் பாஜக வேட்பாளராக களம் கண்டுள்ளார். அந்தத் தொகுதியின் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களித்த இளைஞர் ஒருவர், தாமரைச் சின்னத்துக்கு 8 முறை வாக்களித்த காட்சி வெளியாகி இருக்கிறது. சர்வசாதாரணமாக, எந்தவித அச்சமும் இன்றி விரல்களை விட்டு எண்ணி எண்ணி காட்டும் இளைஞர், 8 முறை தாமரை சின்னத்தில் வாக்களித்துள்ளார்.

#BREAKING | பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த நபர் - வீடியோ வைரல்
#BREAKING | பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த நபர் - வீடியோ வைரல்

ஒவ்வொரு முறையும் தெள்ளத் தெளிவாக பாஜக சின்னத்துக்கு எதிரே உள்ள வாக்குப் பதிவுக்கான விளக்கு ஒளிர்கிறது. இந்தக் காட்சியை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இது தவறு என தெரிந்தால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அங்கிருந்த பூத் கமிட்டி, உண்மையில் கொள்ளை கமிட்டிதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதே காட்சியை பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் கமிஷன் சார், 8 முறை வாக்களிக்கும் பையனை பார் என்றும், இப்போதாவது விழித்தெழு என்றும் கோரியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com