பைக்கில் உலா வந்து செயின் திருடும் காதல் ஜோடி... 100 கிலோ மீட்டர் வேகத்தில் சிட்டாய் பறந்த சம்பவம்..

திருடிய அடுத்த நொடியே பைக்கில் சிட்டாய் பறக்கும் காதல் ஜோடி.. தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு 100 கிலோ மீட்டர் வேகத்தில் தப்பியோட்டம்.. சேசிங் செய்த இளைஞர்கள் எடுத்த வீடியோ.. என்ன நடந்தது? முழுமையாக பார்க்கலாம்.
சிட்டாய் பறந்த காதல் ஜோடி
சிட்டாய் பறந்த காதல் ஜோடிபுதிய தலைமுறை

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் காதல் ஜோடி ஒன்று தொடர்ந்து தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஸ்கூட்டரில் உலா வரும் இந்த ஜோடியில், காதலன் பைக்க ஓட்ட, காதலி பெண்களின் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலிகளை பறிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். பறித்த கண நொடியில் ஸ்கூட்டரில் காணாமல்போகும் இவர்களை, பிடிப்பதில் போலீஸுக்கு சவால் நீடித்து வருகிறது.

இவர்களை பிடிக்க போலீஸார் முயன்று வரும் வேளையில், நலகொண்டா மாவட்டத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர் இந்த ஜோடி. இதைப் பார்த்த அந்த பகுதி இளைஞர்கள், காதல் ஜோடியை விரட்டிச் சென்ற நிலையில், அவர்களோ 100 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டி தப்பியுள்ளனர். பல கிலோமீட்டர் தூரத்திற்கு இளைஞர்கள் சேசிங் செய்தும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

இது பற்றி கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, அந்த ஜோடியை சேசிங் செய்த இளைஞர்கள் எடுத்த வீடியோவும் போலீஸிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காதல் ஜோடியை பிடிக்க நலகொண்டா மாவட்ட போலீஸார் நான்கு தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com