’நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்’.. மகனுக்கான ஜெர்சியை வெளியிட்ட ஷிகர் தவான்!

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தன் மகனுக்காக மனம்கவரும் வகையில் ஜெர்சி ஒன்றைத் தயார் செய்து, அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஷிகர் தவான்
ஷிகர் தவான்இன்ஸ்டா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி, நாளை (ஏப்ரல் 18) 33வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றி, 4 தோல்வி என நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்று, முறையே 7வது (பஞ்சாப் மற்றும் 8வது (மும்பை) இடங்களில் உள்ளன.

இந்த நிலையில், ஷிகர் தவான் தன் மகனுக்காக மனம்கவரும் வகையில் ஜெர்சி ஒன்றைத் தயார் செய்து, அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நம்பர் 1 எனப் பொறிக்கப்பட்டிருப்பதுடன், மகனுடைய ஜோராவர் என்ற பெயரும் எழுதப்பட்டுள்ளது. மேலும், அந்தப் படத்தை வெளியிட்டு, "நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய், மை பாய்" என பதிவிட்டுள்ளார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ’தாய்ப்பால் வேண்டாம்; சூரிய ஒளி மட்டும் போதும்’.. மனைவியை மிரட்டி 1 வயதுக் குழந்தையை கொன்ற தந்தை!

ஷிகர் தவான்
’உன்னை மிஸ் செய்கிறேன்’ - மகனைக் காணாமல் தவிக்கும் ஷிகர் தவான்: இணையத்தில் வைரலாகும் உருக்கமான பதிவு

ஷிகர் தவான், ஏற்கெனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை, கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, ஜோராவர் என்ற குழந்தை உள்ளது. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டதையடுத்து, ஷிகர் தவான் விவாகரத்து கோரி டெல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார்.

அதன் விசாரணையில் கடந்த (2023) அக்டோபர் மாதம் அவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. எனினும், இவருடைய மகன் ஜோராவர் மற்றும் ஆயிஷா முகர்ஜி ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். தன்னுடைய மகனைக் காணாமல் தவிப்பதாக, கடந்த ஆண்டு ஓர் உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார். தற்போது ஜெர்சியிடன் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இனி டவர் இன்றி பேசலாம்.. செயற்கைக்கோள் ஆய்வில் வெற்றி.. தொலைத்தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய சீனா!

ஷிகர் தவான்
"மனதளவில் மனைவி என்னை துன்புறுத்துகிறார்”-விவாகரத்து பெற்றார் தவான்! மகனைக் காட்ட நீதிமன்றம் உத்தரவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com