மும்பையில் பெண் கொலை
மும்பையில் பெண் கொலைTwitter

மும்பையில் மெட்ரோ கட்டுமானப்பகுதிக்கு அருகே சூட்கேஸில் பெண் சடலம்!

மும்பையில் சாந்தி நகர் சிஎஸ்டி சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி நடைப்பெற்ற பகுதிக்கு அருகே சூட்கேஸில் பெண் ஒருவரின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை சாந்தி நகர் சிஎஸ்டி சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி நடைபெற்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பெட்டி கிடந்துள்ளது. இதுகுறித்து சந்தேகித்த அப்பகுதியினர் போலீசாரிடம் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்துள்ளது. விசாரணையில், பெட்டியில் பெண்ணொருவரின் சடலம் இருந்தது தெரியவந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற பெட்டி
கிடைக்கப்பெற்ற பெட்டி

இதுகுறித்து காவல்துறை தரப்பில், “மெட்ரோ திட்டத்துக்காக கட்டுமானப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் இடத்தில் சூட்கேஸ் இருப்பது குறித்து காவல்துறைக்கு மதியம் 12.30 மணி அளவில் தகவல் கிடைத்தது.

சூட்கேஸை திறந்து பார்த்தபோது பெண் ஒருவரின் சடலம் உள்ளே இருந்தது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் குறித்து இதுவரை தெரியவில்லை. அப்பெண்ணுக்கு 25 முதல் 35 வயது இருக்கலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

murder
murder

இந்நிலையில் இறந்த பெண்ணின் உடலானது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் மரணத்திற்கு காரணமாக அமைந்த அடையாளம் தெரியாத குற்றவாளியின் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் பெண் கொலை
சிதம்பரம்: நியாயம் கேட்டு ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்ட இளைஞர்.. காவல்துறை எடுத்த நடவடிக்கை

மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com