youth pt desk
குற்றம்
சிதம்பரம்: நியாயம் கேட்டு ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்ட இளைஞர்.. காவல்துறை எடுத்த நடவடிக்கை
சிதம்பரத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த இளைஞரை தாக்கிய சம்பவத்தில் திரையரங்கு ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் சிரஞ்சீவி என்ற இளைஞர் குடும்பத்தோடு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, அவரை தடுத்துநிறுத்திய ஊழியர்கள் வலுக்கட்டாயமாக சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிரஞ்சீவி சகோதரர்களும் அவருக்கு ஆதரவாக பேச, திரையரங்க ஊழியர்கள் தாக்கியுள்ளனர்.
youth in hospitalpt desk
அதில், சிரஞ்சீவியின் தலையில் காயம் ஏற்பட்டு, 10 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து காயத்துடன் வீடியோ வெளியிட்டு அந்த இளைஞர் நியாயம் கேட்டுள்ளார். இது தொடர்பாக வடுகநாதன் திரையரங்க ஊழியர்கள் 4 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.