’என்னையா பிரிஞ்சி போற’|காதலனை தடுக்க காதலி செய்த விபரீத செயல்! ஒரே போன் காலில் பதட்டமான ஏர்போர்ட்!

பெங்களூரில் தனது காதலனை மும்பைக்கு செல்லவிடாமல் தடுக்க காதலி செய்த செயலால், இறுதியில் காதலி பிரச்னையில் சிக்கியது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு
பெங்களூருமுகநூல்

பெங்களூரில் தனது காதலனை மும்பைக்கு செல்லவிடாமல் தடுக்க காதலி செய்த செயலால், இறுதியில் காதலி பிரச்னையில் சிக்கியது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி, சென்ற 29 வயது நிரம்பிய இந்திரா ராஜ்வார் என்ற பெண் ஒருவர் பெங்களூரு விமான நிலையத்தில் உதவி எண்ணுக்கு அழைத்து, ”இந்த விமானநிலையத்திலிருந்து மும்பைக்கு செல்லும் எனது காதலன் மெஹ்தி அவரது பையில் வெடிகுண்டு வெடிக்குண்டை எடுத்து செல்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், பதறிய விமான நிலைய அதிகாரிகள் மெஹ்தியை தேடி கண்டுபிடித்துள்ளனர். பிறகு அவரை முழுவதுமாக சோதனை செய்துள்ளனர். ஆனால், அவரிடம் எந்த வெடிகுண்டும் தென்படவில்லை.

இதனையடுத்து, வெடிக்குண்டு தொடர்பாக வந்த அழைப்பு குறித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் வெடிக்குண்டு குறித்து தகவல் அளித்த இந்திரா ராஜ்வார் என்ற பெண்ணும் அதே விமான நிலையத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

பெங்களூரு
Today HeadLines| நீட் முதுகலை தேர்வு ஒத்திவைப்பு முதல் பவதாரணி குறித்து யுவனின் உருக்கமான பதிவு வரை!

பிறகு, இந்திரா ராஜ்வாரை அழைத்து விசாரணை நடத்தியதில், காதலர்களாகிய இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதால், மெஹ்தி இவரை விட்டுவிட்டு தனியாக மும்பைக்கு செல்வதற்காக விமானத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். எனவே, இவர் மும்பை செல்வதை தடுக்கவே இப்பெண் இவ்வாறு செய்ததுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இடையூறு விளைவித்ததற்காக, இப்பெண்ணின் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com