Today HeadLines| நீட் முதுகலை தேர்வு ஒத்திவைப்பு முதல் பவதாரணி குறித்து யுவனின் உருக்கமான பதிவு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தீடீரென ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலை தேர்வு முதல் மறைந்த பாடகி பவதாரணி குறித்து யுவன் பதிவு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மத்திய அரசு.

 • நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு புகார்களை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தலைவர் பதவியிலிருந்து சுபோத் குமார் நீக்கி மத்திய அரசு நடவடிக்கை.

 • நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. கடைசி நேர அறிவிப்பால், பாதிக்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

 • கள்ளச்சாராயம் இல்லாத கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகும் என மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி, புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.

 • கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும், திமுகவினருக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்.மேலும், நாளை ஆளுநரை நேரில் சந்தித்து பாஜக குழு புகார் அளிக்க உள்ளதாகவும் பேட்டி.

 • கருணாபுரம் சம்பவம் அண்ணாமலையின் சதித் திட்டம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு.

 • சென்னையில் ஆம்பூர் ஸ்டார் உணவகத்தில் மட்டன் பிரியாணியில் புழுக்கள் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தனர்.இதனால், பிரியாணி சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 • ஹைதராபாத்தில் பெண்ணை சுற்றி வளைத்து கடித்து குதறிய தெருநாய்கள். பெண்ணை விரட்டி, விரட்டி தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் 2வது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்.

 • மறைந்த பாடகி பவதாரணி குறித்து சகோதரர் யுவன் ஷங்கர் ராஜா உருக்கம். பவதாரணி குரலை AI மூலம் பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை எனவும் பதிவு.

 • விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் பட்டியலில் வராத இருவரில் ஒருவரின் உடலை தோண்டியெடுத்து உடற்கூராய்வு செய்ய உத்தரவு. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 • கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சாராய வியாபாரியை கைது செய்த தனிப்படை காவல்துறை அதிகாரிகள். விஷ சாராயம் அருந்தி விட்டு பதுங்கியிருந்த 55 பேரை கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதி.

 • நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெறுகிறது.

 • ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 7 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 • நடைமேடை கட்டணம் உள்ளிட்ட ரயில்வே சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு. மேலும், உரங்களுக்கான ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்யவும் குழு அமைப்பு.

 • விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதற்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

 • நெல்லையில், சாலையில் சண்டையிட்டு ஓடிய மாடுகளால் நேர்ந்த விபத்தால், பைக்கில் சென்ற நீதிமன்ற ஊழியர், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

 • சென்னை அம்பத்தூரில் காவலாளியை கத்தியால் வெட்டிவிட்டு செல்போன் பறித்த சிசிடிவி காட்சியை கொண்டு அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 • உக்ரைனின் கார்கிவ் நகரில் அடுக்குமாடி கட்டடத்தில் ரஷ்ய படை தாக்குதல் நடத்தியதில், 22 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

 • யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது பரபரப்பை ஏற்படுத்திய இளம் ரசிகர் மைதானத்திற்குள் நுழைந்து ரொனால்டோ உடன் செல்ஃபி எடுத்த வீடியோ வைரல்.

 • இறுதிக்கட்டத்தை எட்டிய ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மோதும் சின்னெர் - ஹூபர்ட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com