பஹ்ரைச், உத்தரப் பிரதேசம்
பஹ்ரைச், உத்தரப் பிரதேசம்pt web

உ.பி: கதவில்லாத வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை.. அதிகாலை 3 மணிக்கு தூக்கிச்சென்ற ஓநாய்

உத்திரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் ஓநாய்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Published on

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம் மாஷி தாலுகாவின் வனப் பகுதியை ஓட்டிய கிராமங்களில் இரவு நேரங்களில் ஓநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஓநாய்கள் தாக்குதலால் குழந்தைகள், பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஓநாய் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. கதவு இல்லாத வீடு ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையை அதிகாலை மூன்று மணிக்கு ஓநாய் தூக்கிச்சென்றது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட பிறகே ஒநாய் குழந்தையை தூக்கிச் சென்றதைக் கண்டதாக தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பஹ்ரைச், உத்தரப் பிரதேசம்
நடிகை ராதிகா சரத்குமாரிடம் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை

ஓநாய்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வனத்துறை இதுவரை 4 ஓநாய்களை பிடித்துள்ளனர். மேலும் இரண்டு ஓநாய்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com