ராதிகா
ராதிகா கோப்புப்படம்

நடிகை ராதிகா சரத்குமாரிடம் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை

நடிகை ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியுள்ளனர்.
Published on

கேரவன்களில் ரகசிய கேமராக்கள் இருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் ஒரு சில தினங்களுக்கு முன் பேட்டி கொடுத்திருந்தார். குறிப்பாக கேரளாவில் ஒரு நடிகை இதுபற்றி தன்னிடம் தெரிவித்திருந்ததாக சொல்லியிருந்தார்.

மேலும் ராதிகா சரத்குமார், தானே நேரடியாக புலனாய்வு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் எப்போது நடந்தது, எந்த நடிகை சொன்னார் என்பதையெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

புலனாய்வு அதிகாரிகளும் எப்போது இந்த சம்பவம் நடைபெற்றது, இனி வரும் காலங்களில் கேரவன்களில் பாதுகாப்பை எப்படி உறுதிபடுத்துவது, ரகசிய கேமராக்கள் இருப்பதை எப்படி தடுப்பது என்பதையெல்லாம் கேட்டறிந்தனர்.

ராதிகா
ஜார்க்கண்ட்: போலீஸ் உடற்தகுதித் தேர்வு.. மயங்கி விழுந்த 11 பேர் உயிரிழப்பு.. என்ன காரணம்?

அதுமட்டுமல்லாமல், தற்போதைய படப்பிடிப்பு தளங்களில் அதுபோல் தவறாக நடத்துகிறார்களா என்பதையும் விசாரிக்க உள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் எல்லா கேரவன்களிலும் சோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதேபோல், இதுபோல் கேமராக்கள் இருந்தாலும், அதை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் இருக்கிறது. அதைக் கொண்டு ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com