Why Gold Prices Are Falling Will They Rise Again? current updates
தங்கம் web

தங்கம் விலை குறைவுக்குக் காரணம் இதுதான்.. அடுத்து விலை குறையுமா.. கூடுமா? முழு விவரம் உள்ளே!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அதற்கு காரணங்கள் குறித்தும், வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறையுமா.. அதிகரிக்குமா என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம்.
Published on

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், தங்கம் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்தது. ஆனால், ஈரான் - அமெரிக்கா போர் தொடங்கிய பின்னர்கூட தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,34,400 ரூபாய் என உச்சம் தொட்டது. ஆனால் ஜனவரி இறுதியில் திடீரென தங்கத்தின் விலை ஒரே நாளில் 14 ஆயிரம் குறைந்ததோடு, அடுத்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் 22,800 ரூபாய் குறைந்தது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை சீரான அளவில் குறைந்து, கூடி வந்தது. அதனைத் தொடர்ந்து ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், தங்கம் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்தது.

Why Gold Prices Are Falling Will They Rise Again? current updates
தங்கம்web

ஆனால், ஈரான் - அமெரிக்கா போர் தொடங்கிய பின்னர் கூட தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிலும் மார்ச் 19-ம் தேதி மட்டும் ஒரே நாளில் மட்டும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 5,360 வரை குறைந்தது. அதோடு 10 நாட்களில் சவரனுக்கு 9,200 ரூபாய் அளவு தங்கம் விலை குறைந்துள்ளது.

Why Gold Prices Are Falling Will They Rise Again? current updates
சரியும் தங்கம் விலை.. ஒரு வாரத்தில் ரூ.6,560 குறைவு.. ஏன் தெரியுமா?

சர்வதேச சந்தையில் தங்கம் அமெரிக்க டாலரில்வர்த்தகம் செய்யப்படும் நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தரவுகள் சிறப்பாக இருப்பதாலும், வட்டி விகிதங்கள் குறைக்கப்படாது என்ற எதிர்பார்ப்பினாலும் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு உயரும்போது, மற்ற நாட்டுப் பணத்தை வைத்து தங்கம் வாங்குபவர்கள் அதிக தொகையை செலவழிக்க வேண்டியுள்ளதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து வருகிறது. இதுவே தங்கத்தின் விலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதே போல அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கப் போவதில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

Why Gold Prices Are Falling Will They Rise Again? current updates
தங்கம்புதிய தலைமுறை

இதனால் அமெரிக்க பங்கு சந்தை குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தை விட பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதுவும் தங்கத்தின் விலை குறைய முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில், டாலரின் மதிப்பு குறைய பெரிய அளவில் வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுவதால், தங்கத்தின் விலை வரும் காலங்களிலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Why Gold Prices Are Falling Will They Rise Again? current updates
ஈரான் போருக்கு மத்தியில் சரியும் தங்கம் விலை.. 3 நாளில் 4,600 குறைவு.. ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com