சந்திரபாபு நாயுடுவிற்கு பிரம்மாண்ட வெற்றியைத் தேடித் தந்த ராபின் ஷர்மா... யார் அவர்?

அரசியல் உலகில், ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் ஒரு சூத்திரதாரி இருப்பது, நிலையான விதி. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு நான்காவது முறை முதலமைச்சரானதோடு, மத்தியில் பாஜக ஆட்சிக்கும் ஆணிவேராக இருப்பதற்கு வியூகம் வகுத்துக் கொடுத்தவரைப் பற்றி பார்க்கலாம்.
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுpt web

மீண்டும் அரியணையில் சந்திரபாபு நாயுடு

மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு, பிரதமர் மோடியை விட, தேசிய அளவில் அதிக கவனம் ஈர்த்தவர் சந்திரபாபு நாயுடுதான்... பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கரம் கோர்த்து, ஆந்திராவில் அளப்பரிய வெற்றியை அறுவடை செய்ததே இதற்குக் காரணம். 2019 ஆம் ஆண்டின் தேர்தலில் 23 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 3 மக்களவைத் தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது, அவரது தெலுங்கு தேசம் கட்சி. தற்போது நடந்து முடிந்த தேர்தலில், 135 சட்டப்பேரவை தொகுதிகள், 16 மக்களவைத் தொகுதிகள் என கைப்பற்றி, இமாலய வெற்றியை ருசித்துள்ளது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுமுகநூல்

இந்த அபார வெற்றிக்கு வழித்தடம் அமைத்துக் கொடுத்தது ஒரு சூத்திரதாரி... அவரது பெயர் ராபின் ஷர்மா... ஷோ டைம் கன்சல்ட்டிங் நிறுவனத்தின் தலைவர்... இவர் போட்டுக் கொடுத்த 'ஸ்கெட்ச்'தான், தெலுங்கு தேசம் கட்சியை அரியணையில் அமர்த்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடு
டெல்லியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு; ஆம் ஆத்மியை கை காட்டும் பாஜக!

ராபின் ஷர்மாவின் சூத்திரங்கள்

2019 ஆம் ஆண்டின் தேர்தல் தோல்வி, கட்சியினரை சோர்ந்து போக வைத்தது. தோல்வியில் துவண்டுபோகாமல், 2024 தேர்தலைக் குறிவைத்த சந்திரபாபு நாயுடு அணுகியது, ராபின் ஷர்மாவை. தெலுங்கு தேசம் கட்சியினருக்கு டாஸ்க் கொடுத்துக் கொண்டே இருந்தார் ராபின் ஷர்மா. உதாரணமாக, சந்திரபாபுநாயுடுவின் மகனும் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், ஆந்திரா முழுவதும் மூவாயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்ல வைத்தார் ஷர்மா. இந்த நடைபயணம் ஆந்திர மக்கள் மத்தியில் தெலுங்கு தேசம் கட்சியை பதிய வைத்துக் கொண்டே இருந்தது.

தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பு, 24 மணி நேரமும் ஆக்டிவ்வாக இருக்கும்விதமாக 'வார் ரூம்' ஒன்றை உருவாக்கினார் ராபின் ஷர்மா. இதில் தீயாக வேலை செய்வதற்காக, 200 பேர் இருந்தனர். இந்த வார் ரூமில் தான் பரப்புரைகளின் வடிவம் இறுதியானது. தெலுங்கு தேசம் கட்சியையும், வேட்பாளர்களையும் மக்களுக்கு நெருக்கமாக கொண்டு சேர்ப்பது தான், இங்கு கொடுக்கப்பட்ட 'டாஸ்க்'... இந்த டாஸ்க்கில் வெற்றி கண்டு, தேர்தலில் ஜெயித்துள்ளது ராபின் ஷர்மாவின் ஷோ டைம் கன்சல்ட்டிங் நிறுவனம்.

2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக தேர்தல் வியூகம் வகுத்தது பிரஷாந்த் கிஷோர். ஒரு காலத்தில், அவருடன் இணைந்து பணியாற்றியவர்தான் ராபின் ஷர்மா. இவ்விருவரும், மேலும் சில நண்பர்களும் இணைந்து 2014 ல் 'சி.ஏ.ஜி.' என்ற அமைப்பை உருவாக்கினர். அதாவது, 'CITIZENS FOR ACCOUNTABLE GOVERNANCE'. அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக வியூகமிட்டது சி.ஏ.ஜி. அடுத்த ஆண்டே சி.ஏ.ஜி.யைக் கலைத்த அவர்கள், ரிஷி ராஜ் சிங் உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து I- PAC நிறுவனத்தை தொடங்கினர்.

சந்திரபாபு நாயுடு
மேற்கு வங்க ரயில் விபத்து - 5 பேர் பலி; இன்னும் பலி எண்ணிக்கை உயரலாம்?

வெற்றி பெற்ற ராபின்ஷர்மா

அதன் பிறகு பிரஷாந்த் கிஷோரிடமிருந்து பிரிந்த ராபின் ஷர்மா தொடங்கியது தான் 'ஷோ டைம் கன்சல்ட்டிங்'. 2022 ல் பஞ்சாப்பில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை அரியணை ஏற்றியது இந்த நிறுவனம். இந்த ஆண்டு ஆந்திர தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ராபின் ஷர்மாவின் நிறுவனம், ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரசுக்கு ரிஷிராஜ் தலைமையிலான I-PAC என எதிரெதிரே வியூகம் வகுத்து ஆட்டத்தைத் தொடங்கினர். தேர்தலை மையமாகக் கொண்ட அரசியல் களத்தில், வெற்றி பெற்றிருப்பது ராபின் ஷர்மாதான்.

சந்திரபாபு நாயுடு
‘பாபர் மசூதி வார்த்தையே இல்ல.. நீதிமன்ற கருத்தும் நீக்கம்’- பாடப்புத்தக திருத்தத்தால் எழுந்த சர்ச்சை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com