ராமர் கோயில் திறப்பு விழா - எங்கெங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது?

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு எந்தெந்த மாநிலங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
ராமர் கோயில் திறப்பு விழா - எங்கெங்கு விடுமுறை
ராமர் கோயில் திறப்பு விழா - எங்கெங்கு விடுமுறை puthiya thalaimurai

ராமர் கோயில் திறப்பு விழாவை காண வசதியாகவும் வழிபாடுகள் நடத்துவதற்கு ஏதுவாகவும் பல்வேறு மாநில அரசுகள் விடுமுறை அறிவித்து வருகின்றன.

அதன்படி,

ஒருநாள் விடுமுறை: உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, கோவா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரை நாள் விடுமுறை: குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, ஒடிசா, திரிபுரா, அசாம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழா - எங்கெங்கு விடுமுறை
“பிரதமர் வாய்ப்பு வந்தால் ஒரு கை பார்த்து விடுவோம் முதல்வரே” - அமைச்சர் அன்பில் மகேஸ்!

இதில் டெல்லி, ஒடிசா தவிர மற்ற மாநிலங்கள் பாஜக / பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களாகும். இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி புரியும் இமாச்சல பிரதேச மாநில அரசும் விடுமுறை அளிவித்துள்ளது.

மற்றபடி உத்தராகண்ட், அசாம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகளுக்கு காலை முதல் மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திங்களன்று பங்குச்சந்தைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழா - எங்கெங்கு விடுமுறை
அயோத்திக்காக டெல்லி எய்ம்ஸ்-க்கு அரை நாள் விடுப்பா? சர்ச்சைகளையடுத்து திரும்பப்பெறப்பட்ட அறிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com