இந்தியா
வாட்ஸ் அப்பில் பாலியல் தொழில்: திடுக்கிடும் தகவல்
வாட்ஸ் அப்பில் பாலியல் தொழில்: திடுக்கிடும் தகவல்
கேரளாவில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழில் நடைப்பெற்று வருவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
கேரளாவில் பாலியல் தொழில் நவீன முறையில் வளர்ச்சியடைந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் ஆப் மூலம் பாலியல் தொழில் நடைப்பெற்று வருவதாக ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வை கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (KSACS) மேற்கொண்டது. வாட்ஸ் ஆப் மூலம் இந்தத் தொழில்கள் நடைப்பெற்று வருவதாகவும் இவர்கள் வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு அவர்கள் சந்திக்கும் இடங்கள் போன்றவற்றை தீர்மானித்துக் கொள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. கேரளாவில் தற்சமயம் 15,802 பெண்களும், 11707 ஆண்களும் பாலியல் தொழில்களில் ஈடுபட்டுவருவதாக இந்த அமைப்பு கூறுகிறது. இதில் 2பெண்கள் மற்றும் 10ஆண்கள் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.