what reason of Stock Market Crash on union budget 2026 announce
நிர்மலா சீதாராமன், பங்குச் சந்தைஎக்ஸ் தளம்

மத்திய பட்ஜெட் 2026 எதிரொலி | பங்குச் சந்தைகள் கடும் சரிவு.. ஒற்றை அறிவிப்புதான் காரணமா?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து முடிப்பதற்குள், பங்குச் சந்தை கடுமையான சரிவைச் சந்தித்தது.
Published on

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து முடிப்பதற்குள், பங்குச் சந்தை கடுமையான சரிவைச் சந்தித்தது. இந்தச் சரிவின் காரணமாக, முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவது மரபு. ஆனால், 2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு, இந்திய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE ஆகியன நேரடி வர்த்தகத்திற்காக திறக்கப்பட்டன. இந்திய பங்குச் சந்தைகளின் வரலாற்றில், ஒரு சிறப்பு பட்ஜெட் அமர்வுக்காக வார இறுதியில் வர்த்தகம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர், 1999ஆம் ஆண்டில் பிப்ரவரி 27, சனிக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, ​​சந்தைகள் வார இறுதியில் திறக்கப்பட்டன.

what reason of Stock Market Crash on union budget 2026 announce
nirmala sitharamanx page

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து முடிப்பதற்குள், பங்குச் சந்தை கடுமையான சரிவைச் சந்தித்தது. குறிப்பாக, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை சரிந்த நிலையில், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 16 முக்கிய துறைகளில் 12 துறைகள் இன்று சரிவை சந்தித்தன. மேலும், இந்த சரிவு பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

what reason of Stock Market Crash on union budget 2026 announce
மத்திய பட்ஜெட் 2026 | மாநில நிதிப் பகிர்வு.. தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு.. பங்குச்சந்தை சரிவு!

மத்திய பட்ஜெட் 2026 | மாநில நிதிப் பகிர்வு.. தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு.. பங்குச்சந்தை சரிவுபங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்தின் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை (STT ((எஸ்டிடி என்பது 'பங்குப் பரிவர்த்தனை வரி' என்பதைக் குறிக்கும். இது பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் விதிக்கப்படுகிறது)) அவர் அதிகரிப்பதாக அறிவித்ததே, இந்தச் சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஃபியூச்சர்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார். ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை இரண்டு மடங்குக்கும் அவர் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டதே இந்தச் சரிவுக்குக் காரணம். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் இல்லாததும் முதலீட்டாளர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

what reason of Stock Market Crash on union budget 2026 announce
share marketx page

இதுகுறித்து இன்க்ரெட் மணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் குப்பா, ”திரும்பப் பெறும் வரியில் மாற்றம் வரவேற்கத்தக்கது. ஏனெனில் இது முதலீட்டாளர்கள் மீது குறிப்பிடத்தக்க வரிச் சுமை இல்லாமல் நிறுவனங்கள் பணத்தை விநியோகிக்க உதவுகிறது. மூலதனச் சந்தைப் பிரிவிற்கு ஒரு தடையாக இருப்பது, எஃப்&ஓ பிரிவில் பத்திர பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) அதிகரிப்பு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

what reason of Stock Market Crash on union budget 2026 announce
பட்ஜெட் எதிரொலி.. கடும் சரிவைச் சந்தித்திருக்கும் இந்திய பங்குச்சந்தை.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com