
மத்திய பட்ஜெட் எதிரொலியாக பங்குச் சந்தைகள் கடும் சரிவு
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை சரிவு
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு
வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான வரி குறைக்கப்படும்.
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களுககு பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி இல்லை.
மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5% லிருந்து 2% ஆக குறைப்பு
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 41%-ல் இருந்து 50% ஆக உயர்த்தும் தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. நிதிப் பகிர்வு விகிதம் 41%ஆக தொடரும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு.
வரும் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி வரிப்பகிர்வு வழங்கப்படும்.
2025-ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறை 4.5-க்கும் கீழ் குறைக்கப்பட்டது
2026-27-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை 4.3 ஆக இருக்கும் என மதிப்பீடு
விவசாயிகளின் நிலம், சாகுபடி உள்ளிட்டவற்றின் விவரங்களை ஒருங்கிணைக்க பாரத் விஸ்தார் ஏ.ஐ. செயலி.
வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100% அபராதம்
இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047வரை வரி கிடையாது
கிளவுட் கம்யூட்டிங் நிறுவனங்களுக்கும் 2047 வரை வரி கிடையாது
வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்கு 2% மாக வரி குறைப்பு
வரும் ஏப்ரல் முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல்
சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்.
வருமான வரி கணக்கு தாக்கல் அவகாசம் நீட்டிப்பு
வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு
ரூ.11.7 லட்சம் கோடி கடன் வாங்கப்படும்.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை; 42% அளவிலேயே தொடரும்.
வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு
மத்திய அரசின் நேரடி வரி வருவாய் ரூ.26.7 லட்சம் கோடி; 2026-27-ல் ரூ.28.7 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிப்பு
தென்னை விவசாயத்தில் போட்டித்தன்மையை அதிகரிக்க தென்னை மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்படும்.
கேரளா உள்ளிட்ட முக்கிய தென்னை வளர்ப்பு மாநிலங்களில் புதிய தென்னங்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஷி என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மகளிர் வழி நடத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க SHE- மார்ட் சில்லறை வியாபாராக் கடைகள் அமைக்கப்படும்.
நாடெங்கும் தனியார் துறையுடன் இணைந்து 5 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.
மருத்துவ சுற்றுலாவின் மையமாக இந்தியா மேம்படுத்தப்படும்.
ஆயுர்வேத மையங்கள் மற்றும் மருத்து சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும்.
மத்திய பட்ஜெட்டில் பயோ ஃபார்மா சக்தி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
ஆயுர்வேதத்திற்காக 3 புதிய அகில இந்திய நிறுவனங்கள் அமைக்கப்படும்.
ஆயுர்வேத மருந்துகள் தரம் உயர்த்தப்படும்.
ஆரோக்கியத்திற்கான மிக முக்கிய அங்கமாக யோகா மாறியுள்ளது.
கால்நடை மருத்துவமனைகளை நிறுவுவதற்கு கடன் சார்ந்த உதவி அமைப்பு
தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசாரா செழுமையயை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.
தமிழகம், கேரளா, ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும்.
பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
பொதிகை மலை, இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் ட்ரக்கிங் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பயோ ஃபார்மா சக்தி - 10,000 கோடி
செமிகண்டக்டர் 2.0 - 40,000 கோடி
சிறு, குறு தொழில் - 10,000 கோடி
மின்னணு - 40,000 கோடி
உயிரி தயாரிப்பு மருந்துகள் - 10,000 கோடி
மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய விதிகளில் தளர்வு
இந்தியவில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள்; 10% ஆக உள்ள முதலீடு வரம்பு, 24% ஆக அதிகரிக்கப்படுகிறது.
அனிமேஷன், கேமிங் துறையை வளர்த்தெடுக்க மும்பையில் தனி கல்வி நிறுவனம் உருவாக்கப்படும்.
6 முக்கிய துறைகளில் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.
1. ஏழு முக்கிய மற்றும் முன்னோடி துறைகளில் உற்பத்தியை விரிவுபடுத்துவது
2. பாரம்பரிய தொழில் துறைகளை புதுப்பிப்பது
3. முன்னணி MSME நிறுவனங்களை உருவாக்குவது
4. உட்கட்டமைப்பு வசதிகளுக்கு வலுவான ஊக்கத்தை அளிப்பது
5. நீண்டகால பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உறுதி செய்வது
6. நகர பொருளாதார மண்டலங்களை மேம்படுத்துதல்
நாடு முழுவதும் 7 அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்படும்
சென்னை - பெங்களூரு, அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்
மும்பை–பூனே, ஹைதராபாத்–பெங்களூரு, சென்னை–பெங்களூரு, நியூ டெல்லி–வரணாசி, வரணாசி–சிலிகுரி உள்ளிட்ட வழித்தடங்களில் அதிவேக ரயில் பாதைகள் அமைக்கப்பட இருக்கின்றன.
புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.
சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு, கேரளா, ஒடிஷாவில் அரியவகை கனிமங்கள் உற்பத்திக்கு வழித்தடத் திட்டம் அமைக்கப்படும்
இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி, பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம்
செமி கண்டக்டர் 2.0 திட்டத்திற்காக ரூ 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
3 முக்கிய கடமைகளை (Kartavya) மையமாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது
1. உலகளாவிய மாற்றங்கள் மற்றும் சீரற்ற பொருளாதார சூழ்நிலைக்கு எதிராக பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தியும் தொடர்ந்து நிலைநிறுத்தியும் செல்லுவது.
2. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, அவர்களின் திறனை வளர்த்து, இந்தியாவின் வளமான எதிர்காலப் பயணத்தில் அவர்களை வலுவான கூட்டாளர்களாக மாற்றுவது.
3. “சப் கா சாத்த், சப் கா விகாஸ்” என்ற நோக்கை உறுதி செய்வது. அதாவது, ஒவ்வொரு குடும்பம், சமூகக் குழு, பகுதி ஆகிய அனைத்திற்கும் வளங்கள், அடிப்படை வசதி வாய்ப்புகள் கிடைக்க செய்வது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றதிலிருந்து இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மை, நிதி ஒழுக்கம், நீடித்த வளர்ச்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் ஆகிய அம்சங்களால் குறியிடப்பட்டிருக்கிறது. இது நாங்கள் உணர்வுப்பூர்வமாக எடுத்த முடிவுகளின் வெளிப்பாடு. தங்கள் அரசாங்கம் வெற்றுப் பேச்சுகளை விட சீர்திருத்தங்களுக்கே முன்னுரிமை அளித்துள்ளது. வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் செல்வதை உறுதி செய்கிறோம்.
#UnionBudget2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா? விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி கோவை, மதுரை மெட்ரோ இரயில், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி, புதிய இரயில்வே திட்டங்கள், நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு. இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்த பின் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவது மரபு. ஆனால், 2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படுவதால், இந்திய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE ஆகியன நேரடி வர்த்தகத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளின் வரலாற்றில், ஒரு சிறப்பு பட்ஜெட் அமர்வுக்காக வார இறுதியில் வர்த்தகம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர், 1999ஆம் ஆண்டில் பிப்ரவரி 27, சனிக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, சந்தைகள் வார இறுதியில் திறக்கப்பட்டன. தனிநபர் வருமான வரி குறைப்பு, பெருநிறுவன வரி குறைப்பு மற்றும் ஜிஎஸ்டி மூலம் நுகர்வு வரி குறைப்பு ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருப்பதாக சந்தை நிபுணர் அஜய் பக்கா தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு, தனது அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். அவருக்கும், அவரது குழுவினருக்கும் குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சர்க்கரை கலந்த தயிரை (Dahi-cheeni) ஊட்டி வாழ்த்தினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருக்கும் ஆடை கவனம் பெறும். கடந்த முறை பீகார் மாநில சேலை அணிந்து வந்தார். இந்த முறை காஞ்சிபுரம் பட்டுச் சேலை அணிந்து வந்திருக்கிறார்.
9ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதிக பட்ஜெட் தாக்கல் செய்த பட்டியலில் அவர் 2ஆம் வகிக்கிறார்.