ரூ.17,545 கோடி To பூஜ்யம்: Forbes பட்டியலில் காணாமல்போன பைஜு ரவீந்திரன்..ஒரே ஆண்டில் சரிந்த மதிப்பு!

கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்திய கோடீஸ்வர்களின் பட்டியலில் இடம்பெற்ற பைஜு ரவீந்திரனின் தற்போதைய சொத்து மதிப்பு பூஜ்ஜியம் எனச் சொல்லப்பட்டுள்ளது.
ரவீந்திரன்
ரவீந்திரன்ட்விட்டர்

பணக்காரர் பட்டியலில் இடம்பெறாத பைஜு ரவீந்திரன்

2024ஆம் ஆண்டிற்கான 'உலக கோடீஸ்வரர்கள்' பட்டியலை ஃபோர்ப்ஸ் நேற்று (ஏப்ரல் 3) வெளியிட்டது. இதில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பெற்றிருந்திருந்த நிலையில், தற்போது அது உயர்ந்துள்ளது. 25 இந்தியர்கள் புதிதாக பில்லியனியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் வழக்கம்போல் முகேஷ் அம்பானி முதலிடமும், கெளதம் அதானி இரண்டாம் இடமும் (இந்திய அளவில்) பிடித்துள்ளனர். எனினும், முன்னர் இடம்பெற்றிருந்த பைஜு ரவீந்திரன் மற்றும் ரோஹிகா மிஸ்ட்ரி இந்தாண்டு பட்டியலில் இடம்பெற்றவில்லை.

2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் பிரபல இணையவழி கல்வி நிறுவனமான பைஜு (BYJU'S), கொரோனா ஊரடங்கின்போது புரட்சியை ஏற்படுத்தியது. அதாவது, 2020ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இணையவழி வகுப்புக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. இதனால் பைஜு நிறுவனமும் மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது. இதன்மூலம் கடந்த 2022-இல் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆயினும் அதே ஆண்டு முதல் அந்த நிறுவனம் வீழ்ச்சியையும் சந்திக்க ஆரம்பித்தது. வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பட்டதால், இணையவழி கற்றலுக்கான தேவை குறைந்ததால் பைஜு நிறுவனத்தின் வருவாய் குறைந்தது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ஆண்டு பைஜு நிறுவனம் ரூ.8,245 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!

ரவீந்திரன்
கோடீஸ்வரர்கள் பட்டியல் | இந்தியளவில் No 1-ஆக முகேஷ் அம்பானி.. உலக பட்டியலில் புதிதாக 25 இந்தியர்கள்!

பைஜு நிறுவனம் நஷ்டத்திற்கு என்ன காரணம்?

மேலும் கணக்கு முறைகேடுகள், தவறாக நிர்வாக அணுகுமுறை, பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் என பெரிய சிக்கல்களைச் சந்தித்தது. தவிர, அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகப் புகார்கள் எழுந்ததால், ரவீந்திரனின் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனை நடைபெற்றது. விசாரணையில் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலத்தில் ரூ.28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை அந்த நிறுவனம் பெற்றிருப்பது தெரியவந்தது.

அதே காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் ரூ.9,754 கோடியை அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் அமலாக்கத் துறை எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக, பைஜு நிறுவனம் பெருமளவு வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தது. இவற்றின் விளைவாகத்தான், தற்போது ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் பைஜு ரவீந்திரன். ரூ.17,545 கோடி சொத்து மதிப்புடன் கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்திய கோடீஸ்வர்களின் பட்டியலில் இடம்பெற்ற பைஜு ரவீந்திரனின் தற்போதைய சொத்து மதிப்பு பூஜ்ஜியம் எனச் சொல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபோர்ப்ஸ் நிறுவனம், “பைஜுஸ் நிறுவனம் பல நெருக்கடிகளைச் சந்தித்ததன் காரணமாக அதன் மதிப்பீடு பிளாக்ராக் மூலம் 1 பில்லியன் டாலராகக் குறைக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை - கைவிரித்த ஆப்பிள் நிர்வாகம்!

ரவீந்திரன்
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறாத ட்ரம்ப்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com