இந்தியா
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறாத ட்ரம்ப்
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறாத ட்ரம்ப்
ஃபோர்ப்ஸ் இதழின் அமெரிக்கா பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக முன்னாள் அதிபரும் தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்பின் பெயர் இடம்பெறவில்லை.
அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் நடப்பாண்டில் முதல் 400 இடத்தில் இருப்பவர்களின் விவரங்களை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் 25 ஆண்டுகளில் முதன்முறையாக டொனால்ட் ட்ரம்பின் பெயர் இடம்பெறவில்லை. 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது ட்ரம்பின் சொத்துமதிப்பு 27 ஆயிரம் கோடியாக இருந்தது. அதுவே தற்போது 18 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.