\
சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரிx page

மேற்கு வங்கம் | மதரஸா சார்ந்த உதவி திட்டம்.. முடிவு கட்டிய புதிய பாஜக அரசு!

மேற்கு வங்க முதல்வராக பதவியேற்ற நிலையில் சுவேந்து அதிகாரி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார்.
Published on

பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, ஜூன் 1 முதல் பெண்களுக்கு 3,000 உதவிகள் வழங்கப்படும் அன்னபூர்ணா யோஜனா திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஜூன் 1 முதல் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டத்திற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு அமைத்துள்ளது. அக்கட்சியின் முதல்வராக பதவியேற்ற நிலையில் சுவேந்து அதிகாரி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், இந்தியா - வங்கதேசம் எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக ஆலோசித்தார். தொடர்ந்து அதற்கான செயல்முறைக்கும் உத்தரவிட்டார். அடுத்து, மாநிலத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவரும் அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் தடுப்பு வாயில்களையும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மதரஸா.
மதரஸா.

இந்த நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, ஜூன் 1 முதல் பெண்களுக்கு 3,000 உதவிகள் வழங்கப்படும் அன்னபூர்ணா யோஜனா திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஜூன் 1 முதல் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டத்திற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரத்தில், மதரஸா துறை மற்றும் தகவல், கலாச்சாரத் துறையின் கீழ் உள்ள மதம் சார்ந்த உதவித் திட்டங்களை படிப்படியாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேநேரத்தில், மதரசா துறை மற்றும் தகவல், கலாசாரத் துறையின்கீழ் செயல்படுத்தப்பட்டு வந்த மதம் சார்ந்த உதவித் திட்டங்களை நிறுத்த பாஜக அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது. எனினும், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் இந்த மாத இறுதிவரை தொடரும் என்றும், அதன் பிறகு படிப்படியாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவேந்து அதிகாரி
சட்டவிரோத சுங்கச்சாவடிகளை மூட உத்தரவு.. தொடர்ந்து அதிரடி காட்டும் பாஜக புதிய அரசு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com