தெலுங்கான சட்டப்பேரவை தேர்தல்
தெலுங்கான சட்டப்பேரவை தேர்தல்புதிய தலைமுறை

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்புதிய தலைமுறை

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில், 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று வாக்குப்பதிவு நடப்பதன் காரணமாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக 50,000 காவல்துறையினர், 375 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகின்றதால், இத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களும், விவிபேட் இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

மொத்தமுள்ள 35,655 வாக்குச்சாவடிகளில் 27,000 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதை கேமராக்கள் மூலம் கண்காணிக்க தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்த தேர்தலில் 2,290 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

தெலங்கானா
தெலங்கானாட்விட்டர்
தெலுங்கான சட்டப்பேரவை தேர்தல்
முன்னணியில் பிஆர்எஸ்; முட்டி மோதும் காங்கிரஸ்; கோட்டுக்கு அந்தப்பக்கம் பாஜக- தெலங்கானா தேர்தல் களம்!

இதற்கிடையே முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகன் ராமாராவ், சிர்சில்லா தொகுதியில் களமிறங்கி உள்ளார். இதேபோல் முதலமைச்சர் சந்திரசேகர் ராவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார். அதோடு கோடங்கல் தொகுதியிலும், ரேவந்த் ரெட்டி களம் காண்கிறார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடுகிறார். ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் சகோதரர் அக்பருதீன் ஒவைசி, சந்திரகியான்கட்டா தொகுதியில் களம் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com