How lone survivor escaped Air India crash
How lone survivor escaped Air India crashPT

விமானத்தில் இருந்து கீழே குதித்தும் விஸ்வேஷ் உயிர் தப்பித்தது எப்படி? வெளியான புதிய தகவல்!

விமான விபத்தில் இருந்த உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வேஷ் குமார் ரமேஷின் சகோதரரின் உடலும் டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகு அவருடைய குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Published on

குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மேலும், விமானம் மோதிய கட்டடத்தில் இருந்தவர்கள் பலரும் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் பலியான உடல்கள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அந்த விபத்தில் இருந்த உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வேஷ் குமார் ரமேஷின் சகோதரரின் உடலும் டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகு அவருடைய குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, இந்த விபத்தில் அவரது சகோதரரும் பலியாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரது சகோதரரின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இந்தச் சடங்கின்போது தனது சகோதரரின் உடலை விஸ்வாஸ் சுமந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. அதில், அவர் காயங்களுக்கு பிளாஸ்திரி போட்டப்படியே செல்கிறார். இந்த வீடியோ பார்க்கும் மனங்களை உருக்கியது.

How lone survivor escaped Air India crash
அன்றும், இன்றும்.. 11A இருக்கையில் உயிர்பிழைத்த இருவர்! இந்தியாவில் அதிர்ஷ்டம்.. ஐரோப்பாவில் எப்படி?

மறுபுறம், அவர் இந்த விபத்தில் இருந்து தப்பித்தது குறித்தான ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த விபத்தின்போது அவர் 11a என்ற இருக்கையில் பயணித்துள்ளார். இந்த இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் உள்ளது. அதாவது, நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே இந்த இருக்கை அமைந்துள்ளது. இந்தச் சூழலில்தான் விபத்து நடைபெற இருந்த சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். சீட் பெல்ட் அணியாத அவர் விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி வந்ததும் விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு உயிர் பிழைத்தார்.

Viswashkumar Ramesh brother funerals on ahmedabad plane crash
விஸ்வேஷ் குமார்எக்ஸ் தளம்

அப்போது அவர் எகிறிக் குதித்த இடத்தில், அதாவது விபத்து நடைபெற்ற இரண்டு கட்டடங்களுக்கு இடையே, தரையில் தளர்வான மணல் இருந்துள்ளது. அந்த தளர்வான மணலே அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது. ஒருவேளை, அங்கு தளர்வான மணலுக்குப் பதிலாக வேறு கற்களோ அல்லது கடினமான பாறைகளோ இருந்திருந்தால் அவருக்கும் பெரிய காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்து விமானம் மோதிய வேகத்தில், அதிலிருந்து எரிபொருள் வெளியேறி தீப்பிடித்துள்ளது. இதனாலேயே பல உயிர்கள் பலியாகி உள்ளன. அந்த வகையில் விஸ்வேஷ் குதித்த இடமும் மணலாகிப் போனதால் தீ பரவவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

How lone survivor escaped Air India crash
‘ஆயிரத்தில் ஒருவன்’ | விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர்.. ‘மெடிக்கல் மிராக்கல்’ நடந்தது எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com