ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானை.. மீட்க போராடிய தாய் யானை.. திக் திக் நிமிடங்கள்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானை.. மீட்க போராடிய தாய் யானை.. திக் திக் நிமிடங்கள்
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானை.. மீட்க போராடிய தாய் யானை.. திக் திக் நிமிடங்கள்

குட்டி யானைகளின் சேட்டைகள், சுற்றுலா பயணிகளை துரத்தும் யானை கூட்டம், குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் யானைகள் என யானைகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அடிக்கடி காணக்கிடைக்கிறது.

அந்த வகையில், தனது குட்டியை காப்பாற்றுவதற்காக தாய் யானை செய்த செயல் தொடர்பான வீடியோ ட்விட்டரில் இந்திய வன அதிகாரி பர்வீன் கஸ்வானால் பகிரப்பட்டிருக்கிறது.

அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கே இருக்கும் நாகர்கடா பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு இடையே இருக்கும் ஆற்றை 10க்கும் மேற்பட்ட யானைகள் சேர்ந்த கூட்டம் ஒன்று கடக்கும் போது குட்டியானை ஒன்று ஓடும் நீரில் மூழ்கி ஆற்றில் அடித்துச் செல்லுவது போல சிக்கியிருக்கிறது.

இதனை கண்ட பின்னால் வந்த தாய் யானை ஒன்று, அந்த குட்டி யானையை தனது தும்பிக்கையாலேயே பிடித்து இழுத்து காப்பாற்றியிருக்கிறது. பின்னர் தாய் யானையை கெட்டியாக பிடித்தபடியே அந்த குட்டி யானையும் ஆற்றை கடந்து அவர்களது இருப்பிடத்தை நோக்கி சென்றிருக்கிறது.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு தொடர்பான வீடியோவை இணையவாசிகளால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வீடியோவின் கடைசி சில நொடிகள் குட்டி யானையை தாய் யானை காப்பாற்றியதா இல்லையா என்ற கேள்வியையும் இணையவாசிகளிடையே கேட்கப்பட்டு வருகிறது.

மேலும், ஒரு தாய் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் உலகளாவியது. தன் குழந்தையைப் பாதுகாப்பதற்காக தன் உயிரைக்கூட பணையம் வைக்கும் தாய்மார்களின் அந்த உணர்வு இனங்களைக் கடந்தது என தாய் யானையின் செயலை குறித்தும் பதிவிட்டிருக்கிறார்கள்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com