Published : 25,Jun 2022 03:24 PM

60 லட்சம் பேரால் ஈர்க்கப்பட்ட கப் & சாசர்... அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கு?

why-this-cup-and-saucer-video-gets-6-million-views

விநோதமான, விசித்திரமான வீடியோக்களுக்கும், போஸ்ட்களுக்கும் எப்போதும் பஞ்சமே இருக்காத ஒரு இடம்னா அது சமூக வலைதளங்கள்தான். நித்தமும் எதாவது ஒரு பதிவு பகிரப்பட்டு அது வைரலாகி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் ஒரு சாதாரண கப் & சாசர் வைத்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று கிட்டத்தட்ட 60 லட்சம் பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

வைரலான அந்த வீடியோவில் கப்பையும், சாசரையும் தனித்தனியே பார்க்கும் போது சாதாரணமானதாகத்தான் தெரியும். அதே கப்பை சாசர் மேல் வைத்து மெதுவாக சுற்றினால் ஒரு மேஜிக் போல தெரியும். அதுதான் நெட்டிசன்களை அசர வைத்திருக்கிறது.

image

ஆம், அந்த கப்பை சாசர் மீது வைத்து ரொட்டேட் செய்தால் அதில் பறவை ஒன்று பறப்பது தெரியும். அதே கப்பையும் சாசரையும் தனியாக பார்த்தால் அதில் இருக்கும் கோடுகள்தான் அவற்றை ஒன்றாக வைத்தும் சுற்றும் போது பறவையாக காணச் செய்கிறது.

பறவை மட்டுமல்ல பாண்டா கரடி, புலி எல பல வகைகளில் இந்த மாதிரியான இல்யூஷன் எஃபெக்ட்டில் கப் சாரரை கொரியாவைச் சேர்ந்த luycho என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இது 50 டாலர் முதல் அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்களிலேயே கிடைக்கிறது.

ALSO READ: 

இப்படியொரு அழகான மணப்பெண்ணை பார்த்ததுண்டா? - லூனாவின் க்யூட்டெஸ்ட் வீடியோ!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்