”தாமதமானாலும் நல்ல தீர்ப்பு”- பாலியல் வன்கொடுமை வழக்கில் உ.பி. பாஜக எம்.எல்.ஏ-க்கு 25 ஆண்டுகள் சிறை!

உ.பி.யில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம்துலார் கோந்த்
ராம்துலார் கோந்த்ட்விட்டர்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராம்துலார் கோந்த். பாஜக எம்.எல்.ஏவான இவர்மீது, கடந்த 2014ஆம் ஆண்டு15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்தநிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ராம்துலார் கோந்த் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். எனினும், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படாமல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (டிச.15) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதில், ராம்துலார் கோந்துக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், ராம்துலார் கோந்த், 2 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை பெற்றுள்ளதால் மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழந்துள்ளார். ஜாமீனில் வெளிவந்த ராம்துலார், இந்தத் தீர்ப்பால் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: விஜய் ஹசாரே 2023: முதல்முறையாக மோதும் ராஜஸ்தான் - ஹரியானா.. இதற்கு முன்பு சாம்பியன் ஆன அணிகள் எவை?

முன்னதாக, இந்த சம்பவம் நிகழ்ந்தபோது ராம்துலார் கோந்த் எம்.எல்.ஏவாக பதவியில் இல்லை. அதன்பிறகு, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கு சோன்பத்ராவில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நீதி குறித்து சிறுமியின் குடும்பத்தினர், ”நீதி கிடைக்க தாமதமானாலும் நல்ல தீர்ப்பு வந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வழக்கை வாபஸ் பெறுமாறு ராம்துலார், எங்கள் குடும்பத்தை மிரட்டி வந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

ராம்துலார் எம்.எல்.ஏ. பதவியை இழந்தாலும், அதனால் உத்தரப்பிரதே சட்டசபைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அம்மாநிலத்தில் பெரும்பான்மையுடனே பாஜக உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், அத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆறு ஆண்டுகள் தகுதியற்றவராக இருப்பார்.

இதையும் படிக்க: பிரமாண்ட ஏற்பாடு.. ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் ’முதல்முறை எம்.எல்.ஏ’ ஆன பஜன்லால் சர்மா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com