மேக்கப் கிட்டை பயன்படுத்திய மாமியார்: அக்கா, தங்கையை விரட்டிய கணவன்கள்-விவாகரத்து வரை சென்ற விவகாரம்

மாமியார் - மருமகள் சண்டை என்பது பெரும்பாலும் வரதட்சணைக் கொடுமை அல்லது குடும்பப் பிரச்னைகள் மூலம் ஏற்படும். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் மாமியார் - மருமகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை வித்தியாசமானதாக உள்ளது.
model image
model imagefreepik

உத்தரப்பிரதேசம், ஆக்ராவின் மால்புரா பகுதியைச் சேர்ந்த இரு சகோதரிகள், ஒரேவீட்டில் மருமகள்களாக நுழைந்துள்ளனர். அதாவது, அந்த வீட்டில் உள்ள அண்ணன் மற்றும் தம்பியை இந்தச் சகோதரிகள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், இவர்களது மாமியார் மேக்கப் போட்டுக் கொள்வதில் பிரியம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

model image
model imagefreepik

இதற்காக, அவர் மூத்த மருமகள் வைத்திருந்த மேக்கப் சாதனப் பொருட்களை எடுத்து மாமியார் பயன்படுத்தி வந்துள்ளார். அவருடைய அனுமதி இல்லாமலேயே இந்த மேக்கப் சாதனங்கைப் பயன்படுத்தி வந்துள்ளார். தவிர, அவருடைய ஆடைகளையும் கேட்காமல் அணிந்துள்ளார். இதைப் பார்த்ததும் மூத்த மருமகள் மாமியாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் தொடர்ந்து அவரது மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: விமானப் பயணத்தில் திடீர் உடல்நிலை பாதிப்பு: ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்!

ஒருகட்டத்தில், இதனால், இருவருக்குள்ளும் கடுமையான மோதல் முற்றியுள்ளது. இந்த விஷயத்தை, அந்தச் சகோதரிகளின் கணவர்களிடமும் மாமியார் தெரிவித்துள்ளார். அவர்கள் தலையிட்டு, மனைவிகள் இருவரையும் தாக்கியுள்ளனர். அத்துடன் அவர்களை வீட்டைவிட்டும் துரத்தியுள்ளனர். அந்த சகோதரிகள் இருவரும் தற்போது அவர்களுடைய பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளனர். இதுதொடர்பாக, சகோதரிகள் இருவரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அத்துடன், குடும்ப ஆலோசனை மையத்திலும் இருவரும் விவகாரத்துகோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

model image
model imagefreepik

இந்தப் புகாரின்பேரில், 2 மருமகள்கள் மற்றும் மாமியாரை அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. தங்களது கணவர்கள், அவருடைய அம்மாவின் பேச்சுக்கு முன்னுரிமை கொடுத்து தங்களைத் தாக்கி வீட்டைவிட்டு விரட்டியுள்ளனர். அதனால், தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என சகோதரிகள் பிடிவாதமாக உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பிரச்னைக்கு தீர்வுகாண முடியவில்லை. இதையடுத்து அடுத்த மாதம் கணவர்கள், மனைவிகள் மற்றும் மாமியாரோடு இந்தப் பிரச்னையைப் பேசித் தீர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: செல்லாத 8 வாக்குகள்; ஜெயித்த பாஜக வேட்பாளர்.. என்ன நடந்தது.. சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடியா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com