உ.பி.: வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்து பாலியல் துன்புறுத்தல்.. தூக்கில் சடலமாக சிறுமிகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
model image
model imagefreepik

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக போலீசார், “நேற்று (பிப்.28) சிறுமிகள் விளையாடுவதற்காக வயல்வெளிக்குச் சென்றுள்ளனர். நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவர்களைத் தேடியுள்ளனர். அப்போது, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், இருவரும் மீட்கப்பட்டனர். சிறுமிகளை வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்து, பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. உள்ளூர் ஒப்பந்ததாரரின் 18 வயது மகன் மற்றும் 19 வயது மருமகனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ பதிவுகளை எடுத்து வைத்துக் கொண்டு, சிறுமிகளை மிரட்டியுள்ளனர். இதனால், ஏற்பட்ட அவமானம் மற்றும் காயங்கள் காரணமாகவே சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” தெரிவித்துள்ளனர்.

model image
model imagefreepik

சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்பந்ததாரர் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்துபோன அந்த இரண்டு சிறுமிகளும் அவர்களின் குடும்பத்தாரும் ஒப்பந்ததாரர் ஒருவர் நடத்திய செங்கல்சூளையில் பணிபுரிந்து வந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க: பாஜகவுக்கு வாக்களித்த காங். MLAs.. இமாச்சல் அரசியலில் கிளம்பிய புயல்..காப்பான் ஆக டி.கே.சிவக்குமார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com