”வேகமா அடிங்க..” - இஸ்லாமிய மாணவரை அடிக்க இந்து மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியை? அதிர்ச்சி வீடியோ

பள்ளியில் இஸ்லாமிய மாணவரை அடிக்க சொன்ன ஆசிரியர்.. உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்
teacher
teacherpt web

இஸ்லாமிய மாணவர் ஒருவரை அடிப்பதற்கு இந்து மாணவர்களை பெண் ஆசிரியையே ஊக்கப்படுத்துவது போன்ற அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் நிகழ்ந்துள்ளது. வீடியோவில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. முசாபர்நகரின் குப்பபூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முசாபர்நகர் காவல்துறையின் பொறுப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்கின்றனர். ஒரு மாணவர் மட்டும் ஆசிரியைக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். 'Jitne bhi Muslim bachche hai…' என்று ஆசிரியை கூறுகிறார். ஒரு மாணவர் வந்து நின்று கொண்டிருந்த இஸ்லாமிய மாணவரின் கன்னத்தில் அடித்துவிட்டு செல்கிறார். அவருக்கு மேலும் இரண்டு மாணவர்கள் வந்து கன்னத்திலும் பின்புறத்தில் பளார் என்று அடித்துவிட்டு செல்கின்றனர். ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள்; வேகமாக அடியுங்கள் என்று ஆசிரியை சொல்வது வீடியோவில் கேட்கிறது. அந்த ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்று தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்த நிலையில், பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

காவல்நிலையத்திற்கு இந்த விவகாரம் சென்றுவிட்ட நிலையில், ஆசிரியை போலீசார் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆசிரியைக்கு எதிராக புகார் கொடுக்க விரும்பவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். அந்த பள்ளிக்கு இதற்கு மேல் அனுப்பப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com