10 நகரங்களில் 10 லட்சம் மக்கள்.. 2வது இடத்தில் கேரளா!
இந்தியாவில் பத்து லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களை அதிகமாகக் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. மக்கள்தொகை அளவில் நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், பத்து நகரங்களில் பத்து லட்சத்துக்கு அதிகமானோர் வசிக்கின்றனர். நாட்டின் சிறிய மாநிலங்களில் ஒன்றான கேரளா இந்த பட்டியலில் இரண்டாம் இடம் வகிப்பதுதான் சுவாரசியம். கேரளாவில் ஏழு நகரங்களில் பத்து லட்சத்துக்கு அதிகமானோர் வசிக்கின்றனர்.
தமிழ்நாட்டிலும் மஹாராஷ்டிராவிலும் தலா ஆறு, குஜராத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் தலா நான்கு நகரங்களில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தில் அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரத்தில் மட்டுமே பத்து லட்சத்துக்கு அதிகமானோர் வசிக்கின்றனர். ஐநாவின் மக்கள்தொகை பகுப்பு கணிப்புகளிலிருந்து இந்தத் தரவுகள் பெறப்பட்டுள்ளன.