உத்தரப்பிரதேசம்: தண்டவாளத்தில் கிடந்த சமையல் சிலிண்டர்
உத்தரப்பிரதேசம்: தண்டவாளத்தில் கிடந்த சமையல் சிலிண்டர்எக்ஸ் தளம்

உத்தரப்பிரதேசம்: தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்... துரிதமாக செயல்பட்ட லோகோ பைலட்!

உத்தரபிரதேசத்தில், தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர் கிடந்ததை பார்த்த லோகோ பைலட் அவசரமாக ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்துள்ளார்.
Published on

கான்பூரில் இருந்து பிரயக்ராஜ்க்கு சரக்கு ரயில் ஒன்று பயணித்துள்ளது. அதிகாலை 5 மணிக்கு தண்டவாளத்தில் சிலிண்டர் கிடந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவசரமாக ரயிலை நிறுத்த பிரேக் பிடித்த நிலையில், அது சிலிண்டருக்கு மிக அருகில் சென்று நின்றுள்ளது.

உத்தரப்பிரதேசம்: தண்டவாளத்தில் கிடந்த சமையல் சிலிண்டர்
உத்தரப்பிரதேசம்: தண்டவாளத்தில் கிடந்த சமையல் சிலிண்டர்

பிரேம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிலிண்டர் கிடப்பது குறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் 5 கிலோ சமையல் சிலிண்டரை தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். இதுகுறித்து, ரயில்வே துறை விசாரித்து வருகிறது.

உத்தரப்பிரதேசம்: தண்டவாளத்தில் கிடந்த சமையல் சிலிண்டர்
“எந்தவொரு பெரிய ஹீரோவுடனும் இணைந்து பணியாற்றும் ஆசை எனக்கு இல்லை” - நடிகை சிம்ரன்!

விபத்து ஏற்படாதவாறு ரயிலை நிறுத்திய சரக்கு ரயில் ஓட்டுநரை அதிகாரிகள் பாராட்டினர். பயணிகள் ரயிலாக இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com